Breaking News
யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி - 446 மனித எலும்புக்கூடுகள்! செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது!

பாதுகாப்பான நாடுகள் பட்டியல்! இந்தியாவை விட பாதுகாப்பான நாடாக இலங்கை, பாகிஸ்தான்?

உலகின் பாதுகாப்பான நாடுகள் பட்டியல் வெளியீடு! இந்தியாவின் இடம் என்ன?

உலகின் மிகவும் பாதுகாப்பான நாடுகள் பட்டியலில், இந்தியாமுன்னணி வளர்ந்த நாடுகளான அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தை முந்தியுள்ளதென நம்பியோ (Numbeo) வெளியிட்ட 2025-ஆம் ஆண்டுக்கான பாதுகாப்பு குறியீடு தெரிவிக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் நம்பியோ தரவுத்தளம் வெளியிடும் இந்த பட்டியலில், பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினுக்கு இடையில் பைரனீஸ் மலையில் அமைந்துள்ள ஐரோப்பிய நாடான அன்டோரா, இந்தாண்டின் உலகின் மிகப் பாதுகாப்பான நாடாக அறிவிக்கப்பட்டுள்ளது. அன்டோராவுக்கு அடுத்த இடத்தில, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், தைவான், ஓமன், ஐல் ஆப் மேன், ஹாங்காங், ஆர்மீனியா, சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளும் முதல் 10 இடங்களில் இடம் பெற்றுள்ளன.

இந்தியாவை விட பாதுகாப்பான நாடாக இலங்கை, பாகிஸ்தான்?

ஆசிய நாடுகளில் குறிப்பிடும்படியாக சீனா 76.0 புள்ளிகள் பெற்று 15-வது இடத்தில் உள்ளது. அதேபோல, இலங்கை 59-வது இடத்தினை பிடித்துள்ளது. சுவாரசியமாக, பாகிஸ்தான், இந்தியாவை விட ஒரு இடம் முன்னேறி 65-வது இடத்தில் உள்ளது. அதே நிலையில், பங்களாதேஷ் 126-வது இடத்தில் உள்ளது என அந்த பட்டியல் கூறுகிறது. பட்டியலில், வெனிசுலா, 19.3 புள்ளிகளுடன் கடைசி இடத்தைப் பிடித்து உலகின் மிகவும் குறைந்த பாதுகாப்பு கொண்ட நாடாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதே போல குறைவான புள்ளிகளை பெற்று, பப்புவா நியூ கினியா, ஹைதி, ஆப்கானிஸ்தான், தென்னாபிரிக்கா, ஹோண்டுராஸ், டிரினிடாட் & டொபாகோ, சிரியா, ஜமைக்கா மற்றும் பெரு ஆகியன பாதுகாப்பற்ற நாடுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் விரிவான தகவலுக்காக, நம்பியோ இணையதளத்தை (www.numbeo.com) (http://www.numbeo.com) பார்வையிடலாம்.