Breaking News
கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்!

777 மெழுகுதிரி தாங்கிகளை சேகரித்து காட்சிப்படுத்தி ஈழத்து பெண் உலக சாதனை!

.

777 மெழுகுதிரி தாங்கிகளை சேகரித்து காட்சிப்படுத்தி ஈழத்து பெண் உலக சாதனை மேற்கொண்டார். குறித்த காட்சிப்படுத்தும் நிகழ்வு இன்று இரவு 7 மணியளவில் நடைபெற்றது.  கனடாவில் வாழும் ஈழத்து பெண்ணான ஆயுள்வேத வைத்தியர் குமுதினி கோபாலகிருஸ்ணன் குறித்த கின்னஸ் சாதனைக்காக குறித்த நிகழ்வை நடத்தினார்.
இதற்கு முன்னர் அமெரிக்கர் ஒருவர் 527 மெழுகுதிரி தாங்கிகளை சேகரித்து காட்சி படுத்தி கின்னசில் இடம் பிடித்திருந்தார்.  குறித்த சாதனையை தாண்டி 777 மெழுகுதிரி தாங்கிகளை சேகரித்து குறித்த சாதனையை இன்று பதிவு செய்தார்.

கனடாவில் வசித்து வரும் குமுதினி கோபாலகிருஸ்ணன் ஆயுள்வேத வைத்தியராக சேவை செய்து வருகின்றார். தனது வாழ்நாளில் கின்னஸ் சாதனை ஒன்றை நிகழ்த்த வேண்டும் என்ற கனவுடன் கடந்த 30 வருடமாக மெழுகுதிரி தாங்கிகளை சேகரித்து வந்தார். குறித்த கின்னஸ் சாதனைக்காக விண்ணப்பித்திருந்த அவர், தனது சாதனையை ஈழத்தில் நிகழ்த்தும் நோக்குடன் இன்று தனது சாதனை பதிவினை மேற்கொண்டார்.  முறிகண்டி பகுதியில் பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட இல்லத்தில் குறித்த காட்சிப்படுத்தலும், உறுதிப்படுத்தும் நிகர்வும் இன்று நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.