Breaking News
கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்!

வடமராட்சி கிழக்கில் 300 ஏக்கர் காணி அபகரிப்பு நடவடிக்கைக்கு மக்கள் மீண்டும் எதிர்ப்பு!

தனியார்‌ நிறுவனத்தால் மக்களிடம் காணியை பெற்றுக்கொள்வதற்காக விருப்பம் கோரியபோது குறித்த பிரதேச மக்களால் தமது கிராம சூழலில் காணிகளை வழங்க முடியாது என திட்ட வட்டமாக தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மணல்காடு குடத்தனை வடக்கு, பொற்பதி குடத்தனை கிழக்கு கிராம சேவகர் பிரிவுகளில் தனியார் ஒருவருக்கு கொல்வ் விளையாட்டுக்களுடன் கூடிய சுற்றுலா, பொழுதுபோக்கு மைய்யங்கள் அமைப்பதற்க்காக 300 ஏக்கர் காணியை பெற்றுக்கொள்ளும் நோக்கில் 1 இன்றைய தினம் குறித்த தனியார் மற்றும் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலாளர் தலைமையில் மணல்காடு, குடத்தனை வடக்கு, பொற்பதி கிராம மக்களுடனான கலந்துரையாடல் பொற்பதியில்  இடம் பெற்றது.

இதில் குறித்த தனியார்‌ நிறுவனத்தால் மக்களிடம் காணியை பெற்றுக்கொள்வதற்காக விருப்பம் கோரியபோது குறித்த பிரதேச மக்களால் தமது கிராம சூழலில் காணிகளை வழங்க முடியாது என திட்ட வட்டமாக தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு இவர்கள் இது சம்மந்தப்பட்ட கலந்துரையாடலை பல தடவை மேற்கொண்டு உள்ளதாகவும் அதன் போது கிராம மக்கள் தமது கருத்துக்களை முன் வைத்த போதும் அவர்கள் மீண்டும் மீண்டும் முன் வருவது வருத்தத்துக்குரிய விடயம் என கிராம மக்களால் சுட்டி காட்டப்படும் போது  வடமராட்சி கிழக்கு பிரதேச செயலாளர் குறித்த தனியார் நிறுவனம் கிராம மக்களுக்கு கலந்துரையாடல் செய்வது தனக்கு அறிவிக்க வில்லை என மக்கள் முன் பகிரங்கமாக அறிவித்தார் .

பின்னர் கிராம மக்களிடம் பிரதேச செயலாளர் காணி கொடுக்க மறுப்பதற்கான காரணத்தை வினாவிய போது கிராம மக்கள் தமது அன்றாட தேவைக்கே தமது கிராமத்தில் நிலப்பரப்பு குறைவாக உள்ளது எனவும் மற்றும் புதிதாக திருமணம் செய்து வரும் குடும்பங்களுக்கு இதுவரை இருப்பதற்கு காணி குடுக்க வில்லை எனவும் என பல காரணங்கள் முன் வைக்கப்பட்டது 
பின்னர் குறித்த கிராம உத்தியோகத்தர்களிடமிருந்து பிரதேச செயலாளர் காணிகள் இல்லாத குடும்பங்களின் விபரங்கள் மற்றும் எண்ணிக்கையினை அறிக்கையிட்டு அவர்களுக்கு காடி வழங்குவதற்கான வேலைத்திட்டம் மிக விரைவில் நடைபெரும் என கூறியுள்ளார்.