பலதும் பத்தும். 01.04 .2026 - பிரித்தானியாவின் நட்பு நாடுகளுக்குப் பாதுகாப்பு வழங்குவதே பிரதான இலக்கு! !
2025 G.C.E A/L Results Released | உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன.
யாழ்ப்பாணம் – பருத்தித்துறை கடற்கரையில் முதியவர் சடலம் இன்று (31) மீட்கப்பட்டது.
யாழ்ப்பாணம், பருத்தித்துறை கடற்கரை பகுதியில் இன்று காலை ஒரு முதியவரின் சடலம் கரையோரத்தில் ஒதுங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்டவர் அல்வாய் பகுதியைச் சேர்ந்த சின்னத்தம்பி குலசிங்கம் (78) என அடையாளம் காணப்பட்டுள்ளார். தகவல்களின் படி, குறித்த முதியவர் நேற்று (திங்கட்கிழமை) குடும்பத்தினருடன் ஏற்பட்ட முரண்பாட்டின் பின்னர் கோபத்தில் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். அதன்பிறகு நீண்ட நேரமாக வீடு திரும்பாததால் உறவினர்கள் அவரைத் தேடி வந்தனர். இந்நிலையில், இன்று காலை வியாபாரி மூளை கடற்கரை பகுதியில் அவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவின் நட்பு நாடுகளுக்குப் பாதுகாப்பு வழங்குவதே இந்த நடவடிக்கையின் பிரதான இலக்கு!
ஈரானினால் முன்னெடுக்கப்படும் ஏவுகணை மற்றும் ஆளில்லா வானூர்தி தாக்குதல்களில் இருந்து தனது நேச நாடுகளைப் பாதுகாப்பதற்காக, மத்திய கிழக்கு பிராந்தியத்திற்கு மேலதிக இராணுவப் படைகளையும் நவீன வான் பாதுகாப்பு அமைப்புகளையும் அனுப்ப பிரித்தானிய அரசு தீர்மானித்துள்ளது. பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் பிரித்தானியாவின் மிகச்சிறந்த இராணுவ பலம் இவ்வாறு நிலைநிறுத்தப்படவுள்ளதாக அந்நாட்டு பாதுகாப்புச் செயலாளர் ஜோன் ஹீலி தெரிவித்துள்ளார். ஈரானின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் வகையில் அதிநவீன வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்புகள் மற்றும் கண்காணிப்பு கருவிகள் இப்பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இப்பிராந்தியத்தில் உள்ள பிரித்தானியாவின் நட்பு நாடுகளுக்குப் பாதுகாப்பு வழங்குவதே இந்த நடவடிக்கையின் பிரதான இலக்கு என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், கடல்சார் மற்றும் வான்பரப்பு பாதுகாப்பினை உறுதிப்படுத்த சர்வதேச பாதுகாப்புப் படையினருடன் இணைந்து காவல்துறையினர் மற்றும் இராணுவத்தினர் உயர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
"சேவை நலன் பாராட்டு வைபவம்"
சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தில் நிறைவான சேவையாற்றி இடமாற்றலாகிச் செல்லும் கலாசார மத்திய நிலைய பொறுப்பதிகாரி திருமதி யாழினி வினோத்குமார், நலன்புரி நன்மைகள் பிரிவின் அபிவிருத்தி உத்தியோகத்தர். திருமதி பகீரதி ரமணன், கைத்தொழிற்பிரிவின் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி நித்தியா சுகந்தன் ஆகியோருக்கான சேவை நலன் பாராட்டு வைபவம் இன்று [31] சண்டிலிப்பாய் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
சண்டிலிப்பாய் பிரதேச செயலக உதவிப்பிரதேச செயலாளர் திருமதி சங்கீதா கோகிலதர்சன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் செயலக உத்தியோகத்தர்களின் வாழ்த்துரைகள், பணிநயப்புரைகள், பாடல் மற்றும் ஏற்புரைகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
சீனாவிலிருந்து வானூர்தி திருப்பி அனுப்பப்பட்டுள்ளது!
சீனாவிலிருந்து கட்டுநாயக்க சர்வதேச வானூர்தி நிலையத்திற்கு வருகை தந்த சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸின் (China Eastern Airlines) வானூர்தியொன்று, நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மத்தல சர்வதேச வானூர்தி நிலையத்திற்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளன. கட்டுநாயக்கவைச் சூழவுள்ள பகுதிகளில் நிலவும் மோசமான வானிலை காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். மேலும், கட்டுநாயக்கவிற்கு வருகை தரும் ஏனைய பல வானூர்தி தற்போது தரையிறங்கி வருகின்ற போதிலும், வானிலை மாற்றங்களினால் விமானப் போக்குவரத்தில் குறிப்பிடத்தக்க காலதாமதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
2025 G.C.E A/L Results Released | உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன.
2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் பரீட்சைத் திணைக்களத்தினால் சற்றுமுன்னர் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. பரீட்சை முடிவுகளை "doenets.lk" அல்லது "results.exams.gov.lk" ஆகிய அதிகாரப்பூர்வ இணையதளங்களில் பார்வையிட முடியும். A/L 2025 முடிவுகளைப் பார்ப்பதற்கான SMS வழிமுறைகள்.
1.EXAMS என டைப் செய்து, இடைவெளி (Space) விடவும்.
2.உங்கள் சுட்டெண் (Index Number) ஐ உள்ளிடவும்.
3.இதனை 77191 என்ற இலக்கத்திற்கு அனுப்பவும்.
•Dialog: EXAMS <index number> and send to 7777 from your Mobile,•Airtel: EXAMS <index number> and send to 7545 from your Mobile
தூக்கிட்டு உயிரிழந்த இளைஞன்- பெரிய நீலாவணை பிரிவில் சம்பவம்!
இளைஞன் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவில் இன்று இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் 18 வயது மதிக்கத்தக்க இளைஞனே இவ்வாறு தூக்கில் தொங்கிய நிலையில் அவரது வீட்டில் இருந்து பொலிஸாரினால் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். காதல் விவகாரம் அல்லது வேறு ஏதாவது தனிப்பட்ட காரணமாக குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதா என ஆரம்ப விசாரணைகளை பொலிசார் முன்னெடுத்துள்ளனர். இந்த நிலையில் சடலம் மீட்கப்பட்டு திடீர் மரண விசாரணை அதிகாரியின் விசாரணையின் பின்னர் கல்முனை பகுதியிலுள்ள வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. சம்பவம் தொடர்பில் பெரிய நீலாவணை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


