Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

தமிழர் ஆவண காப்பதால் சுவிசில் வரலாற்று நூல் வெளியீடு!

ஊர்வலமாக எடுத்துச் சென்று தகனம் செய்வதற்குக் கூட இயலாத நிலை.


உலகத் தமிழர் ஆவண மையத்தில் சார்பாக தொகுத்து, தமிழர் ஆவண காப்பகத்தால், சுவிசில் பிப்ரவரி 8 வெளியீடு செய்யப்படும் வரலாற்று நூல்.

ஊர்வலமாக எடுத்துச் சென்று தகனம் செய்வதற்குக் கூட இயலாத நிலை. சங்கரை, தமிழ்நாட்டின் திருநெல்வேலிப் பகுதியைச் சேர்ந்த வறிய குடும்பத்தைச் சேர்ந்தவர் எனவும், நோய்வாய்ப்பட்டு இறந்துவிட்டார் எனவும், அவரது உடலை சொந்த ஊருக்கு எடுத்துச் செல்வதற்கு நிதிவசதி இல்லையெனவும் கூறி. 
மரணச்சான்றிதழ் ஒன்றினைப் பெற்று, நள்ளிரவு நேரத்தில் யாரோ ஒருவரது அநாதைப் பிணம்போல, அந்தத் தனியார் மருத்துவமனையிலிருந்து பொது வாகனம் ஒன்றில் எடுத்துச் சென்று 
மதுரையிலுள்ள ஒரு சுடுகாட்டில், பொன்னம்மான், பேபி (இளங்குமரன்), கிட்டு, அப்பையா அண்ணர், கட்சித் தொண்டர்கள் சிலரோடு பழ.நெடுமாறன் ஆகியோரோடு நானும் ஒருவனாகச் சென்று தகனம் செய்தோம்.

அப்பையா அண்ணர் அவர்களே சங்கரது உடலுக்குத் தீ மூட்டினார். சங்கரின் அஸ்தி சேகரித்து பாதுகாப்பாக வைக்கப்பட்டு, மறுவருடம்தான் சங்கரது மரணச்செய்தியும் அவனது பெற்றோருக்குத் தெரிவிக்கப்பட்டு அஸ்தியும் கையளிக்கப்பட்டது.

சாதாரணமாக உலகில் யாராக இருந்தாலும்சரி, எங்கள் உடலில் எங்கேயோ ஒரு இடத்தில் காயம்பட்டுவிட்டது என்றால்கூட நாங்கள் "ஐயோ அம்மா" என்றுதான் குழறுவோம். 
ஆனால் சங்கரது உடலைவிட்டு உயிர் பிரிகின்ற அந்த இறுதி நேரத்திலும்கூட, அவனால் எதையுமே புரிந்துகொள்ள முடியாத அந்த மயக்க நிலையிலும்கூட “தம்பி...தம்பி" என்ற வார்த்தைகள் தான் அவனது வாயிலிருந்து வெளிவந்தன. (தலைவரை நாம் அப்போது தம்பி என்றுதான் அழைப்போம்)

ஒவ்வொரு போராளியும் எங்கள் தலைவர்மீது எந்த அளவுக்குப் பற்றையும் பாசத்தையும் வைத்திருக்கின்றார்கள்; நம்பிக்கையோடும் விசுவாசத்தோடும் இருக்கின்றார்கள் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.
ஒவ்வொரு போராளிமீதும் தலைவர் எந்த அளவிற்கு அன்போடும். ஆதரவோடும் இருக்கின்றார்; அவர்களது வீரத்தைப் போற்றுகின்றார்; அவர்களது தற்கொடைகளுக்கு எந்த அளவுக்கு மதிப்பும் மரியாதையும் தருகின்றார் என்பதற்கு "மாவீரர் நாள்" ஒரு சான்றாகும்.

விடுதலைப் புலிகள்   இயக்கத்தில் முதல் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட சங்கர் (சத்தியநாதன்) மரணித்த அந்த நாளை, நவம்பர் (கார்த்திகை) 27ஆம் நாளை மாவீரர்களை நினைவு கொள்கின்ற நாளாக, "மாவீரர் நாளாகப்" பிரகடனம் செய்து 1989 இல் இருந்து ஆண்டுதோறும் நினைவேந்தல் செய்து வரப்படுகின்றது.

-ஆ.தேவர் 
நன்றி:எரிமலை (கார்த்திகை 1993)