Breaking News
யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி - 446 மனித எலும்புக்கூடுகள்! செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது!

போதைப்பொருளை ஒழிப்பதற்கு பொலிஸாருக்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது!

.

போதைப்பொருளை ஒழிப்பதற்கு  தற்போதைய அரசாங்கம் பொலிஸாருக்கு முழு சுதந்திரம் வழங்கியுள்ளதாக பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் பிரதி அமைச்சர்  சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.

புறக்கோட்டை மிதக்கும் வணிக வளாகம் போதைப்பொருள் கிடங்காக மாறியுள்ளதாக கிடைக்கப்பெற்ற தகவலை வௌியிட்டு பிரதியமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

புறக்கோட்டை மிதக்கும் வணிக வளாகம் 2014 இல் 352 மில்லியன் ரூபா செலவில் கட்டப்பட்டது.

தற்போது அங்குள்ள 92 கடைகளில் 80% கடைகள், பலகைகள் இற்று போயுள்ளமை , மின் விளக்குகள் சரியாக இயங்காமை, அசுத்தமான சூழல், துர்நாற்றம், விதிமீறல் போன்றவற்றால் மூடப்பட்டுள்ளன.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் பிரதி அமைச்சர்  சுனில் வட்டகல தெரிவிக்கையில்போதைப்பொருளை ஒழிப்பதற்கு  தற்போதைய அரசாங்கம் பொலிஸாருக்கு முழு சுதந்திரம் வழங்கியுள்ளதாக  தெரிவித்தார்.