Breaking News
செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்!

தியாக தீபம் திலீபனின் 37ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு: அஞ்சலி செலுத்திய உறவுகள்

.

யாழ்ப்பாணம்

ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 37வது நினைவு தினம் இன்றைய தினம் வியாழக்கிழமை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. யாழ்ப்பாணம், நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் தியாகி தீலிபன் உயிர்நீத்த நேரம் காலை 10.48 மணிக்கு அஞ்சலி நிகழ்வுகள் ஆரம்பமானது. நிகழ்வில், மாவீரர்களின் சகோதரி, முன்னாள் போராளி பொதுச் சுடர் ஏற்றியதை தொடர்ந்து, மலர் மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

Oruvan

Oruvan

Oruvan

வவுனியா

தியாகி திலீபனின் 37வது நினைவு தினம் தமிழர் தாயக காணாமல்ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் இன்று வவுனியாவில் அனுஸ்டிக்கபட்டது.

Oruvan

Oruvan

Oruvan

  •  
  •  
  •  

முல்லைத்தீவு

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு வர்த்தக சங்கத்தினரின் ஏற்பாட்டில் தியாக தீபம் திலீபனின் 37 ஆம் ஆண்டு நினைவு நாளானது இன்றையதினம் புதுக்குடியிருப்பு சந்தை பகுதியில் இடம்பெற்றிருந்தது.

இந்நிகழ்வு, புதுக்குடியிருப்பு வர்த்த சங்க தலைவர் நீதன் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது.

குறித்த அஞ்சலி திகழ்வில் தியாக தீபம் திலீபனின் திரு உருவ படத்திற்கு புதுக்குடியிருப்பு வர்த்தகர்கள், பொதுமக்களால் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டு தொடர்ந்து உரையுடன் அஞ்சலி நிகழ்வு நிறைவடைந்திருந்தது.

Oruvan

Oruvan

Oruvan

Oruvan

Oruvan

Oruvan