Sanskathi
Apr 13

கனடாவில் இருந்து நாடுகடத்தப்படவுள்ள இலங்கைத் தமிழன்!

கனடாவில் இருந்து நாடுகடத்தப்படவுள்ள இலங்கைத் தமிழன்!

கனடாவில் நாடுகடத்தலை எதிர்கொண்டுள்ள தமிழர் ஒருவர், தொடர்ந்தும் அந்நாட்டில் தங்கியிருக்க போராடி வருவதாக ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

பிரிட்டிஷ் கொலம்பியா கடற்கரையிலிருந்து 492 இலங்கைத் தமிழர்களுடன் கைப்பற்றப்பட்ட கப்பல் தொடர்பில் கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகளுக்குப் பிறகும், கனடிய நீதிமன்றங்கள் மற்றும் அகதி வாரியங்கள் இன்னமும் பின்தொடர்ந்து வருகின்றன. 

அத்துடன் கப்பலில் மக்களை ஏற்றிச் சென்றவர் தொடர்ந்து கனடாவில் தங்கியிருப்பதற்கு போராடி வருகின்றார்.

கடந்த மார்ச் 8, 2018 திகதி வெளியாகிய புதிய முடிவில், பெடரல் நீதிமன்ற நீதிபதி ஒருவர், லெஸ்லி இம்மானுவேல் என்ற குறித்த கப்பலின் கப்டன் ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் நாடு கடத்தலுக்கு எதிராக தாக்கல் செய்த மனுவை நிராரித்துள்ளார் என இணைய செய்தியில் வெளியாகியுள்ளது.

குடிவரவு மற்றும் அகதிகள் வாரியம் முதன்முதலில் 2011 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இம்மானுவேலை கனடாவில் தங்க அனுமதிக்க கூடாது என தீர்மானித்தது. ஆனால், 2012 ஆம் ஆண்டு ஜுன் மாதம் கப்பல் தலைவராக இருந்ததற்காக மனித கடத்தலுக்கு உதவியதாக குற்றம் சாட்டப்பட்டார்.

அந்த குற்றச்சாட்டை நிராகரித்தவர், கடற்படை பயிற்சிக்கான சில பயணிகளில் ஒருவராக தான் இருந்ததாகவும், அதன் முதன்மை குழுவினர் தாய்லாந்தின் கடலோரப் பகுதியை விட்டு வெளியேற்றப்பட்ட பின் கப்பலின் கட்டளையை மட்டுமே எடுத்துக் கொண்டதாக இம்மானுவேல் குறிப்பிட்டார்.

மனிதாபிமான காரணங்களுக்காகவே கனடாவிற்கு கப்பலை கொண்டு சென்றதாகவும், இதனால் தனக்கு எவ்வித ஆதாயமும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கனடாவின் உச்ச நீதிமன்றம் தொடர்புடைய வழக்கில் அவர் தொடர்புப்பட்டமையினால் அவருக்கு எதிரான குற்றவியல் வழக்கு பின்னர் இடைநிறுத்தப்பட்டது.

கனடாவின் மனித கடத்தல் சட்டங்கள் மிகவும் தீவிரமாக இருக்கும் எனவும், மனிதாபிமான காரணங்களுக்காக செயல்படும் மக்களுக்கு அது பொருந்தக்கூடாது என்றும் 2015 ஆம் ஆண்டு தீர்ப்பளிக்கப்பட்டது.

இம்மானுவேல் மற்றும் மூன்று இலங்கையர்களுக்கான விசாரணை 2016 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இறுதியில் ஆரம்பிக்கப்பட்டது.

அதன் போது நீதிபதி அவரை குற்றவாளி அல்ல என கண்டறிந்தார், கப்பலில் இருந்தவர்களின் உயிரைக் காப்பாற்றுவதற்காக கப்பலை அவர் எடுத்துக் கொண்டார் என்பதற்கான ஆதாரங்களை ஏற்றுக்கொள்ளப்பட்டது.

2017ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் தனது நாடு கடத்தல் தொடர்பான உச்சநீதிமன்ற உத்தரவை மறுபரிசீலனை செய்ய முயன்றார்.

ஆனால் இத்தகைய விண்ணப்பங்கள் வழக்கு முடிவடைந்து 15 நாட்களுக்குள் தாக்கல் செய்யப்பட வேண்டும், ஆனால் இம்மானுவேல் ஐந்து ஆண்டுகளுக்கு பின்னர் தாக்கல் செய்துள்ளார்.

தான் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டால் விடுதலைப் புலிகளுக்கு தொடர்புடையவர் என கூறி சித்திரவதைக்கு உட்படுத்தப்படலாம் என குறிப்பிட்டு தொடர்ந்து கனடாவில் தங்கியிருப்பதற்கு அவர் போராடி வருகின்றார்.

மாவீரர்கள்