Breaking News
உலகில் கப்பற்படைக்கெல்லாம் முன்னோடி நம் தமிழர்கள்தான் என்பதை நாம் அறிய வேண்டும்!
, 'நான் இராஜ இராஜ சோழன் செய்த பெரும் சாதனைகளை எண்ணி எண்ணி வியக்கிறேன். . ஏர்ல் பேக்கன் (Earl Bakken) எனும் புகழ்பெற்ற அமெரிக்க விஞ்ஞானி.

உலகில் கப்பற்படைக்கெல்லாம் முன்னோடி நம் தமிழர்கள்தான் என்பதை நாம் அறிய வேண்டும்!
நம் ஹார்வர்ட் தமிழ் இருக்கையை உருவாக்கிய Tamil Chair Inc நிறுவனத்தின் தலைவர் மருத்துவர் ஜானகிராமன் அவர்கள், ஏர்ல் பேக்கன் (Earl Bakken) எனும் விஞ்ஞானி மற்றும் தொழில் அதிபரைச் சந்திக்க நேர்ந்தது. ஏர்ல் பேக்கன் எனும் இந்த விஞ்ஞானி, உலகப் புகழ் பெற்றவர். இதய மருத்துவச் சிகிச்சைக்கான பேஸ் மேக்கர் (Pace makers for the heart) எனும் கருவியைக் கண்டுபிடித்த மெட்ரோனிக்ஸ் (Biomedical Company called Medtronix) நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவர்.
அவர் ஜானகிராமன் எனும் பெயரைக் கேட்டவுடன், "நீ இந்தியாவில் தமிழ்நாடா?" என்று கேட்கிறார். ஜானகிராமன் அவர்கள், "ஆமாம் நான் தமிழ்நாடு தான்" என்கிறார். அவ்வாறு அவர் சொன்னவுடன், "உனக்கு இராஜ இராஜ சோழனைத் தெரியுமா?" என்று அந்த அமெரிக்க விஞ்ஞானி கேட்கிறார்.
மருத்துவர் ஜானகிராமனுக்கோ ஆச்சரியம்! இவருக்கு எப்படி இராஜ இராஜ சோழனைத் தெரியும் என்று. ஏர்ல் பேக்கன் (Earl Bakken) எனும் புகழ்பெற்ற அமெரிக்க விஞ்ஞானி, 'நான் இராஜ இராஜ சோழன் செய்த பெரும் சாதனைகளை எண்ணி எண்ணி வியக்கிறேன். அவரை எனக்கு மிகவும் பிடிக்கும். உலகிலேயே மின்சாரத்தை முதன் முதலில் பயன்படுத்தியவர் இவராகத்தான் இருக்கும்.
கடற்படையில் சிறந்து விளங்கியது அவர் கப்பற்படை. அவர் போருக்குச் செல்லும் கப்பலில் மின்சார விலாங்கு மீன்களை (Electric Eel fish) பெரிய அண்டாக்களில் ஆயிரக்கணக்கில் எடுத்துச் செல்வாராம். தொலை தூரத்திலிருந்து வரும் எதிரிக் கப்பல்கள், தூரத்தில் வரும்போதே, தன் கப்பலில் உடன் வரும் பயிற்சி பெற்ற ஒரு சில வீரர்களை, அந்த மின்சார விலாங்கு மீன் அண்டாவுடன் இறக்கி விடுவார்.
அவர்கள் எதிரி கப்பல் அருகில் சென்றவுடன் அந்த மின்சார விலாங்கு மீன்களை, அடைப்பிலிருந்து அந்தக் கப்பலுக்கருகில் விடுவிப்பார்கள். சற்று நேரத்திற்கெல்லாம் அவை ஒவ்வொன்றும் 600 - 900 வோல்ட் மின்சாரத்தை வெளியிடும். அந்த எதிரிக் கப்பல்களின் ஆணிகள் அந்த மின்சாரத்தால் தாக்குண்டு, அந்தக் கப்பல் ஓரிரு மணி நேரத்திற்கெல்லாம் பல துண்டுகளாகத் தகர்ந்து விடும். இவ்வாறு மாபெரும் கப்பல்களை எல்லாம் இராஜ இராஜ சோழரின் படை வீழ்த்தியுள்ளது".
இத்தகைய வியக்கத்தகு சாதூர்யமான சாகசத்தை, பழந்தமிழரின் சாதனையை அமெரிக்கர் ஒருவர் மூலம் நாம் அறிவது மிகப் பெருமைக்குரியதும் நெகிழ்வூட்டக் கூடியதும் ஆகும்.
மேலும், 'சோழர் படைக் கப்பல்கள் இரும்பாலான ஆணிகளைப் பயன்படுத்தவில்லை. அக்கப்பல்களின் வெளிப்புறம் முழுதும் மரத்தால் ஆனதே. ஆதலால் எதிரிப் படைகள் அதே மின்சார விலாங்கு மீன்களைக் கொண்டு சோழர் கப்பல்களை யாரும் தகர்த்துவிட முடியாது" என்பதையும் அவர் கூறியுள்ளார்.
உலகில் கப்பற்படைக்கெல்லாம் முன்னோடி நம் தமிழர்கள்தான் என்பதை நாம் அறிய வேண்டும்!
உலகெங்கும் பயன்படுத்தப்படும் கப்பற்படை சார்ந்த சொல்லாடலில் தமிழ் வேர்ச் சொற்கள் அதிகம். அதனால் தான் தமிழில் நாவாய் எனும் சொல்லிலிருந்து நேவி Navy எனும் சொல் பிறந்தது. நம் நங்கூரம் எனும் சொல்லிலிருந்து Anchor எனும் சொல் பிறந்தது. நம் கட்டுமரம், Catamaran என்று அவ்வாறே பயன்படுகிறது.
ஆனந்து சு ஆனந்தன்
முன்னாள் செயற்குழு உறுப்பினர்
சிகாகோ தமிழ்ச்சங்கம்