Breaking News
திரிகூட பர்வதம் என்னும் இலங்காபுரியின் பாதமலைக்கு ஏன் சிவனொளிபாதமலை எனப் பெயர் வந்தது?
மூன்று மலைகள் சேர்ந்ததே இலங்காபுரியாகும். இதனாலேயே

திரிகூட பர்வதம் என்னும் இலங்காபுரியின் பாதமலைக்கு ஏன் சிவனொளிபாதமலை எனப் பெயர் வந்தது?
1. மேருமலை
2. கோணமலை
3. பாதமலை
என்னும் மூன்று மலைகள் சேர்ந்ததே இலங்காபுரியாகும். இதனாலேயே "திரிகூட பர்வதம்" என்று அழைக்கப்பட்டது. தற்போது, மேருமலை கடலினுள் சென்றுவிட்டது.
கோணமலை - திருக்கோணமலையின் சிறிய பாகமே வெளியில் உள்ளது. மிகுதி கடலுக்குள் அமிழ்ந்து விட்டது.பாதமலை மட்டுமே சிவனொளிபாதமலை ஆக தற்போதும் உள்ளது.
பாதமலைக்கு ஏன் சிவனொளிபாதமலை எனப் பெயர் வந்தது?
சிவனின் அருள் ஒளியினைப் பெற்றவரின் பாதம் பதிந்த மலை என்பதனால் அப்பெயர் வந்துள்ளது.
இராவணேசுவரனே அவ்வாறு நீங்கா அருள் ஒளி பெற்றவராவார். இதனை திருமூலர் தனது திருமந்திரத்தில் குறிப்பிட்டுள்ளார்.
"தாங்கி இருபது தோளும் தடவரை
ஓங்க எடுத்தவன் ஒப்பில் பெருவலி
ஆங்கு நெரித்து // அமரா என்று அழைத்த பின்
நீங்கா அருள் செய்தான் நின்மலன் தானே"//
பாதமலையில் உள்ள பாத அடையாளம் இராவணேசுவரரின் ஆகும்.
இராவணேசுவரரின் தந்தை பாரத பூமியைச் சேர்ந்தவர். தாயார் இலங்காபுரியைச் சேர்ந்தவர். துணைவியார் மண்டோதரி தவத்தில் சிறந்தவர்.
இராவணேசுவரர்,
1. சிறந்த அரசர்
2. தபசி
3. ஞானி
4. மருத்துவர்
5. இசை விற்பன்னர்
6. சாமவேதம் பாடியவர்
7. சாமகானம் இசைத்தவர்
8. சதுரங்க விளையாட்டை உலகுக்கு தந்தவர்.
9. ஒழுக்கத்தில் உயர்ந்தவர்
10. அட்டமா சித்திகளும் கைவரப் பெற்றவர்.
11. சிறந்த சிவபக்தன்
இராவணேசுவரரின் தவச் சிறப்பினாலேயே இலங்காபுரி #சிவபூமி எனத் திருமூலரால் போற்றப்பட்டது.
இராவணேசுவரரின் சிறப்பை நான்கு நாயன்மார்களும் மிகத் தெளிவுபடப் பாடியுள்ளனர்.
இராமரே இராவணேசுவரரை பழித்துப்பேசியதில்லை. மாறாக இலக்குமணனை அவரிடம் அறிவுரை கேட்க பணித்திருந்தார்.
இராவணேசுவரரை கொன்ற பாவம் போக்க இராமேசுவரத்தில் சிவவழிபாடு செய்திருந்தார்.உலகின் பத்துப் பிரதேசங்களை ஆண்டவர். பத்துக்கலைகளை தெரிந்திருந்தவர். இவற்றாலேயே பத்துத்தலை இராவணன் ஆனார்.
கைலாய மலையின் மையத்தில் இராவணேசுவரரால் தாபிக்கப்பட்ட தங்கச் செங்கோல் இன்றும் உண்டாம். அதில் விலைமதிக்க முடியாத நவரத்தினங்களும் பொறிக்கப்பட்டுள்ளதோடு, அருகே தங்கத்தால் ஆன வீணைக் கொடியும் கைலாய மலையின் முதற் சுற்றுப் பிரகாரத்தில் காணப்படுகின்றதாம்.
தபசிகள் ஞானிகளால் இக்காட்சியைக் காணலாம் எனக் குறிப்பிடப்படுகின்றது.
கைலாயத்தின் ஒரு புறத்தில் இராவணேசுவரரால் அமைக்கப்பட்ட ஏரி இன்றும் "இராவணேசுவரர் தீர்த்தம்" என்று அழைக்கப்படுகின்றது. மறுபுறத்தில் "மானசரோவர்" எனும் ஏரி உண்டு.
இவ்வளவு சிறப்புப் பெற்ற இராவணேசுவர் காலம் கி.மு 12000 ஆண்டுகள் என குறிப்பிடப்படுகின்றன.
இவ்வளவு சிறப்புப் பெற்ற இராவணேசுவரரை வால்மீகியும், கம்பனும் தமது எழுத்துக்களால் பங்கப்படுத்தி விட்டார்கள்.