Sanskathi
Sep 14

பாஜ மீது அதிமுக மீண்டும் பாயச்சல் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு மத்திய அரசே காரணம்: தம்பிதுரை குற்றச்சாட்டு

பாஜ மீது அதிமுக மீண்டும் பாயச்சல் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு மத்திய அரசே காரணம்: தம்பிதுரை குற்றச்சாட்டு

கரூர் மாவட்டம் பள்ளப்பட்டியில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை நேற்று மக்களிடம் குறைகள் கேட்டு மனு வாங்கினார். பின்னர் அவர் அளித்த பேட்டி:

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு காரணம் மத்தியில் ஆளும் பாஜதான். கொள்கை முடிவாக பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் உரிமையை மத்திய அரசு, எண்ணெய் நிறுவனங்களிடம்  விட்டுகொடுத்து விட்டது. இதன்விளைவாக எண்ணெய் நிறுவனத்தினர் லாபத்துக்காக இஷ்டம்போல் விலையை உயர்த்திக்கொள்கிறார்கள்.

மக்களை பற்றியோ, சமுதாயத்தை பற்றியோ  அந்த நிறுவனங்கள் கவலைப்படுவதில்லை. மத்திய அரசின் இந்த கொள்கை முடிவில் மாற்றம் வர வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற பிரச்னைக்கு தீர்வு ஏற்படும். 

இந்த விவகாரத்தில்  நாடாளுமன்றத்தில் போராடி தீர்வு காண்போம். மத்திய அரசின் மாதிரி கிராமம் திட்டத்துக்கு ஒரு ரூபாய் கூட நிதி ஒதுக்கவில்லை. இதனால் அந்த திட்டத்தின் கீழ் கரூர் மாவட்டத்தில் பணிகள்  எதுவும் நடைபெறவில்லை. பாஜ ஒரே மொழி, ஒரே நாடு, ஒரே மதம் என்ற நினைப்புடன் உள்ளது. மக்களை பற்றி சிந்திக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.