Breaking News
சபாநாயகரின் இராஜினாமாவை ஏற்றுக்கொண்டதாக ஜனாதிபதியின் செயலாளர், பாராளுமன்ற செயலாளர் நாயகம் ஆகியோர் அறிப்பு
.

சபாநாயகர் அசோக ரன்வல அவர்களின் இராஜினாமாவை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டதாக ஜனாதிபதியின் செயலாளர், பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீரவுக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.
பத்தாவது பாராளுமன்றத்தின் புதிய சபாநாயகராகத் தெரிவு செய்யப்பட கௌரவ அசோக ரன்வல அவர்கள் தனது பதவியிலிருந்து இராஜினாமா செய்வதாக ஜனாதிபதிக்கு எழுத்து மூலம் அறிவித்திருந்தார்.
அரசியலமைப்பின் 64(2) யாப்புக்கு அமைய சபாநாயகர், பிரதி சபாநாயகர், குழுக்களின் பிரதித் தவிசாளர் ஆகிய எந்தவொரு பதவியிலிருந்தும் இராஜினாமா செய்வதாயின், அது தொடர்பாக தன் கையொப்பத்துடனான கடிதம் மூலம் ஜனாதிபதிக்கு அறிவிக்க வேண்டும்.
அதற்கமைய, ஜனாபதியின் செயலாளரினால் பாராளுமன்ற செயலாளர் நாயகத்துக்கு இந்த எழுத்துமூலமான அறிவித்தல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.