அமெரிக்காவில் கூடுகிறது நாடுகடந்த தமிழீழ அரசாங்க பாராளுன்றம்: மே 16 - 18.
தமிழீழ அரசை மீட்டெடுக்கும் தொடர் போராட்டத்தில் அமெரிக்காவில் கூடுகிறது, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மேமாத சிறப்புப் பாராளுன்ற கூட்டத்தகதொடர்.

தமிழீழ அரசை மீட்டெடுக்கும் தொடர் போராட்டத்தில் அமெரிக்காவில் கூடுகிறது, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மேமாத சிறப்புப் பாராளுன்ற கூட்டத்தகதொடர்.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நான்காவது தவணையின் மூன்றாவது நேரடி அமர்வு நியூ யார்க் மாநிலத்தின் பாவலோ நகரத்தில் (Buffalo City, New York) இம்மாதம் 16, 17 மற்றும் 18 ஆம் திகதிகளில் நடைபெறும்.
பின் வரும் நிகழ்வுகள் விடுதியில் நடைபெறும், M = Hotel, 2040 Walden Ave., Buffalo, NY 14225)
* மே 16, காலை 9 மணி - 12 நண்பகல் -- பாராளுமன்ற அங்குரார்ப்பணம்
* மே 16, மாலை 1 மணி - மாலை 5 மணி -- பாராளுமன்ற நிகழ்வு
* மே 17, காலை 9 மணி - மாலை 5 மணி -- பாராளுமன்ற நிகழ்வு
* மே 17, இரவு 7 மணி - இரவு 9 மணி - மக்கள் அரங்கம்
பதினோராவது முள்ளிவாய்க்கால் நினைவுப்பேருரை Ukrianian Cultural Center இல் மே 18, மாலை 5 - 8 வரை நடைபெறும். (Ukrainian Cultural Center, 562 Genesee St., Buffalo, NY 14204).
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் (நா.க.த.அ) என்பது, ஜனநாயக ரீதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, உலகெங்கிலும் பல நாடுகளில் வாழும் இலங்கைத் தீவைச் சோந்த பத்து இலட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்களுக்கான அரசாங்கமாகும்.
2009ஆம் ஆண்டு இலங்கை அரசால் பெருமளவில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து நா.க.த.அ. உருவாக்கப்பட்டது. 135 அரசவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக உலகெங்கிலும் வாழும் தமிழர்களிடையே, சர்வதேச கண்காணிப்பாளர்களின் மேற்பார்வையில்
நா.க.த.அ, நாலாவது தடவை தேர்தல்களை நடாத்தியுள்ளது.
இதன் அரசவையானது, மேலவை (செனற் சபை), பிரதிநிதிகள் அவை, என இரண்டு அவைகளையும் மற்றும் அமைச்சரவை ஒன்றையும் கொண்டுள்ளது.
தேசியம், தாயகம் மற்றும் சுயநிர்ணயம் ஆகிய கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு,அமைதியான ஜனநாயக மற்றும் இராஜதந்திர வழிகளில் தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளை வென்றெடுக்கும் பரப்புரையை நா.க.த.அ முன்னெடுத்துள்ளது. மேலும், அதன் அரசியல் நோக்கங்களை,அமைதியான வழிகளில் மட்டுமே அடைய வேண்டும் எனவும் அதன் அரசியலமைப்பு வலியுறுத்துகிறது.
தமிழ் மக்களுக்கு எதிராகப் போர்க்குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை புரிந்த குற்றவாளிகளைப் பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்த வேண்டும் என்று சர்வதேச சமூகத்திடம் கோருவதுடன், தமிழர்களின் அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானிக்க பொது சன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் எனவும் நா.க.த.அ. வலியுறுத்துகிறது.
நாடுகடந்த தமிழீழ அரசாங்க பிரதமர் திரு.விசுவநாதன் உருத்ரகுமாரன், நியூயோர்க்கைத் தளமாக்க் கொண்ட ஒரு வழக்கறிஞர் ஆவார்.
* நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் பற்றி
About Transnational Government of Tamil Eelam (TGTE)
* Watch Live: www.tgte.tv