இந்தியா -பாக் போர் நிறுத்தம் | அமெரிக்க அறிவிப்பு..
,

இந்தியாவும் பாகிஸ்தானும் ‘முழுமையான மற்றும் உடனடி போர் நிறுத்தத்திற்கு’ ஒப்புக்கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கூறிள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
குறித்த தகவலை இந்தியா உறுதிசெய்ததுடன், பாக் மற்றும் இந்திய இராணுவ தளபதிகள் தொலைபேசி மூலம் கலந்துரையடிதுடன், இன்று மாலை 05.30 இல் இருந்து போர் நிறுத்தம் அமுலுக்கு வந்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது ட்ரூத் தள பதிவில், இந்தியாவும் பாகிஸ்தானும் “முழுமையான மற்றும் உடனடி போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாகக் கூறுகிறார்.
அமெரிக்காவின் மத்தியஸ்தத்துடன் நீண்ட இரவு நடந்த பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, இந்தியாவும் பாகிஸ்தானும் முழுமையான மற்றும் உடனடி போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்த போர் நிறுத்த ஒப்பந்தத்தை அடுத்து பாகிஸ்தான் தனது வான்வெளியில் கட்டுப்பாடுகளையும் நீக்கியுள்ளதுடன் அனைத்து வகையான விமானங்களும் பறப்பதற்கு அனுமதியளித்துள்ளதாக பாகிஸ்தான் விமான நிலைய ஆணையகம் அறிவித்துள்ளது.
இந்தியா பாகிஸ்தான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டதால், ஜம்மு காஷ்மீரின் பல பகுதிகளில் போர் பதற்றத்தால் மூடப்பட்ட கடைகள் மீள திறக்கப்பட்டுள்ளன.