Breaking News
21 ம் நூற்றாண்டின் புதிய தாராளமய உலக ஒழுங்கில் விடுதலைப் போராட்டங்கள் எதிர்நோக்கும் சவால்கள், இது எமக்கும் பொருந்தும்.
.
21 ம் நூற்றாண்டின் புதிய தாராளமய உலக ஒழுங்கில் விடுதலைப் போராட்டங்கள் எதிர்நோக்கும் சவால்கள், இது எமக்கும் பொருந்தும்.
மேற்கு சகாரா, வட ஆபிரிக்காவில் 'மெக்ரெப்' என்று அழைக்கப்படும் பகுதியில் உள்ள ஒரு பிரதேசமாகும். இது வடக்கே மொராக்கோவையும் வடகிழக்கே அல்ஜீரியாவையும் கிழக்கிலும் தெற்கிலும் மொரிட்டானியாவையும் மேற்கே அத்திலாந்திக் சமுத்திரத்தையும் எல்லைகளாகக் கொண்டது. ஐந்து இலட்சம் மக்கள் தொகையைக் கொண்ட இந்தப் பிரதேசத்தை .பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஸ்பெயின் ஆக்கிரமித்துத் தனது கொலனியாக வைத்திருந்தது . . 1975 ஆம் ஆண்டு, ஸ்பெயினில் பிரங்கோவின் சர்வாதிகார ஆட்சி முடிவுக்கு வந்தபின்பு, ஸ்பெயின் இந்த நாட்டிலிருந்து வெளியேறத் தீர்மானித்தது. அவ்வாறு வெளியேறும்போது இந்த நாட்டை மொராக்கோவும் மொரிட்டானியாவும் இணைந்து நிர்வகிக்கும் ஒரு