வடக்கு கிழக்கில் காணாமாலாக்கபட்ட உறவுகளுக்கு இதுவரை நீதி நிலைநாட்ட படாத பட்சத்தில் இலங்கையில் இடம்பெறவுள்ள கூட்ட தொடர்!
இலங்கை அரசிடம் பல்வேறு வழிகளிலும் கவனயீர்ப்பு போராட்டங்களின் மூலம் நாம் எதிர்பார்த்த நீதி கிடைக்காத பட்சத்தில் இன்று சர்வதேசம் வரை இந்த நீதிக்கான குரல் ஓங்கி ஒலித்து நிற்கின்றது.

வடக்கு கிழக்கில் காணாமாலாக்கபட்ட உறவுகளுக்கு இதுவரை நீதி நிலைநாட்ட படாத பட்சத்தில் இலங்கையில் இடம்பெறவுள்ள கூட்ட தொடர் ஒன்றிற்காக இலங்கைக்கு வருகை தரவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் காணாமலாக்கபட்ட உறவுகளுக்கு நீதியை பெற்று தருவாயில் இலங்கைக்கு வருகை தருமாறும் இல்லையெனில் கண்டதுடைப்புக்காக இலங்கைக்கு வருகை தரவவேண்டாம் என அம்பாறை மாவட்ட வலிந்து காணாமாலாக்கபட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவியும் வடக்கு கிழக்கு வலிந்து காணாமாலாக்கபட்ட உறவுகளின் சங்கத்தின் செயலாளருமான செயலாளர் செல்வராணி தெரிவித்தார்.
அம்பாறை வலிந்து காணாமாலாக்கபட்ட உறவுகளின் சங்கத்தின் முன்றலில் மாதாந்தம் வலிந்து காணாமாலாக்கபட்ட உறவுகளின் நீதி கோரிய போராட்டத்தில் கலந்து கொண்ட பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார் இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்
வடக்கு கிழக்கின் எட்டு மாவட்டங்களிலும் காணாமலாக்கப்பட்ட உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதனை நீதியாக வெளிப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி மாதாந்தம் நாங்கள் இந்த போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றோம்.
இலங்கை அரசிடம் பல்வேறு வழிகளிலும் கவனயீர்ப்பு போராட்டங்களின் மூலம் நாம் எதிர்பார்த்த நீதி கிடைக்காத பட்சத்தில் இன்று சர்வதேசம் வரை இந்த நீதிக்கான குரல் ஓங்கி ஒலித்து நிற்கின்றது.
2009 ஆம் ஆண்டிற்கு பிற்பாடு எங்களுடைய உறவுகளுக்கு என்ன நடந்தது என்ன நடந்திருக்கும் என்பது தொடர்பாக ஜெனிவா மனித உரிமைகள் பேரவை வரை நாங்கள் சென்று எங்களுடைய நீதிக்கான கோரிக்கைகளை ஆதாரங்களுடன் முன் வைத்து வருகின்றோம். போராட்டங்கள் போராட்டங்களாக தொடர்ச்சியான நிநிற்கின்றோம் அதற்கான நீதியை நிலைநாட்ட வேண்டும் என சர்வதேசத்தை நாம் கேட்டு நிற்கின்றோம்.
இலங்கை அரசின் உள்ளகப் பொறிமுறை மீது எங்களுக்கு சிறு துளி கூட நம்பிக்கை இல்லை ஆகவே தான் நாம் சர்வதேச பொறிமுறையை நாடி நிற்கின்றோம்.
எத்தனை ஜனாதிபதிகள் இந்த ஜனாதிபதி மாளிகைகளை அலங்கரித்து தங்களுடைய ஆட்சிக்கதிரைகளை பிடித்து சென்றாலும் தற்பொழுது பதவிக்கு வந்த ஜனாதிபதி கூட பதவிக்கு வர முதல் எமக்கான நீதியினை நிலை நாட்டுவேன் என தெரிவித்து இதுவரை அந்த நீதியை நிலைநாட்டவில்லை.
காணாமலாக்கப்பட்ட உறவுகளுக்கு என்ன நடந்தது என எனக்கு தெரியும் நான் ஆட்சிக்கு வந்தால் இந்த உறவுகள் தொடர்பில் நிச்சயம் கரிசனை செலுத்துவேன் குறிப்பாக இந்த பயங்கரவாத தடைச் சட்டத்தை இல்லாது செய்வேன் என குறிப்பிட்டவர் தான் இன்று எம்மைப் பற்றி எந்த ஒரு சிறுதுளி கூட பேசாது சுற்றி திரிகின்றார்.
எமது உறவுகளை காணாமல் போகச் செய்தது இந்த அரச படையினர் இந்த அரச படையினருக்கு எதிராகத்தான் செயற்படமாட்டேன் என்ற போர்வையில் தான் இந்த அனுர அரசு இன்று பின் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கின்றது .
எங்களுக்கு எப்பொழுதும் இந்த உள்ளகபொறிமுறையில் தீர்வு கிடைக்கப் போவதில்லை.சர்வதேச ஒருமுறைதான் எங்களுக்கான தீர்வினை பெற்று தரும்.
ஐக்கிய நாடுகள் பிரதிநிதி(செயலாளர் நாயகம் ) இலங்கைக்கு வர இருக்கின்ற நிலையில் அவர் இலங்கைக்கு வரக்கூடாது என நாங்கள் கூறுகின்றோம்.
இலங்கைக்கு வருகை தந்தால் மாத்திரம் எமக்கான தீர்வினை அவர் பெற்றுத் தருவாரா? இலங்கை அரசுடன் அவர் பேசுகின்ற பொழுது இங்கு ஒரு பிரச்சனைகளும் இல்லை காணாமலாக்கப்பட்டோர் என்ற ஒரு பிரச்சனை இல்லை என்று அப்பட்டமாக கூறுவார்கள்.
இலங்கைக்கு நீங்கள் வருவது என்றால் எமக்கான தீர்வினை பெற்று தருவதற்கு வாருங்கள் இல்லையெனில் வர வேண்டாம். இலங்கை அரசின் மாயமான கதைகளை நம்பி நீங்கள் ஏமாந்து எமக்கான தீர்வினை தருவீர்களா என்று கூட எமக்கு சந்தேகம் இருக்கின்றது.
காணாமலாக்கபட்டோர் பிரச்சனைக்கு நீதியினை வழங்குவதில் பின்னிற்கின்ற நாடுகளில் முதலாவதாக இலங்கை தான் இருக்கின்றது.
இன்று நாங்கள் தான் யுத்தம் நிறைவடைந்தும் இவ்வளவு காலங்கள் எங்களுடைய போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றோம். சர்வதேசம் யோசித்துப் பார்க்க வேண்டும் ஜெனிவா இது குறித்து சிந்தித்துப் பார்க்க வேண்டும் இந்த சிறிய நாட்டில் இடம்பெற்ற மனிதாபிமானற்ற அரசினால் முன்னெடுக்கபட்ட யுத்தத்தில் 1லட்சத்து 47 ஆயிரத்து 670 க்கும் மேற்பட்ட உறவுகளை நாம் பறிகொடுத்துள்ளோம்.
ஆகவே இங்கு வருபவர் யாராக இருந்தாலும் எமக்கான தீர்வுகளை பெற்றுத்தர முன்வேண்டும் என கேட்டு நிற்கின்றோம்.
காணாமாலாக்கபட்ட உறவுகளுக்கு நீதியை பெற்று தரமுடியுமா இருந்தால் மாத்திரமே ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் இலங்கைக்கு வரவேண்டும் இல்லையெனில் அவர் இலங்கைக்கு வருகை தர கூடாது !அம்பாறை மாவட்ட வலிந்து காணாமாலாக்கபட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவி செல்வராணி தெரிவிப்பு