பிராம்டனில் தமிழ் இன அழிப்பு நினைவகம் சேதம் – சிங்கள தேசிய வெறியின் குரூர முகம் வெளிப்படுகிறது
விரைவில் குற்றவாளிகளை கைது செய்வோம் என உறுதி மொழி அளித்துள்ள பிராம்டன் காவல்துறையினர்.

பிராம்டன், கனடா – கனடா தமிழர்கள் பெருமையுடன் மே 11, 2025 அன்று திறந்து வைத்திருந்த தமிழ் இன அழிப்பு நினைவகம், மே 27-ம் தேதி நள்ளிரவில் அறிந்தோ, திட்டமிட்டோ செய்யப்பட்ட செயலில் சேதப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நினைவகம், 2009 இல் முள்ளிவாய்க்காலில் நடந்த இன அழிப்பை நினைவுகூரும் வகையில் உருவாக்கப்பட்டது.
■.சேதமடைந்த நினைவகம் – தமிழர்களின் வரலாற்றை அழிக்க சிங்களத் தாக்குதல்
4.8 மீட்டர் உயரம் கொண்ட அந்த stainless steel நினைவகம், Chinguacousy பூங்காவில் அமைந்துள்ளது. இது, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் முன்பு இடிக்கப்பட்ட நினைவகத்திற்குப் பதிலாக கனடா தமிழர்கள் முயற்சியில் அமைக்கப்பட்டது. இன்று, அதே நினைவகமே தாக்குதல் நடத்தியிருப்பது முள்ளிவாய்க்காலில் தமிழ் மக்களைக் கொன்ற சிங்கள இனவாதத்தின் தொடர்ச்சியாகவே காணப்படுகிறது.
■.காவல்துறை விசாரணை – கைது உறுதி
பிராம்டன் காவல்துறையினர் இந்தச் சம்பவத்தை தீவிரமாக விசாரித்து வருகின்றனர். விரைவில் குற்றவாளிகளை கைது செய்வோம் என உறுதி மொழி அளிக்கப்பட்டுள்ளது. மறுசீரமைப்புப் பணிகள் இப்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
■.நினைவகம் மீது இலங்கை அரசின் இடையூறு
இந்த நினைவகம் நிறுவப்பட்டதிலிருந்தே, இலங்கை அரசும் சிங்கள அதிகாரிகளும் கடும் எதிர்ப்பை தெரிவித்திருந்தனர். 2024 ஆகஸ்டில், இலங்கையின் வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி, கனடா உயர் அதிகாரியை அழைத்து, இந்த நினைவகம் "பொய்யான வரலாற்றை" கூறுவதாகக் கூறியிருந்தார்.
இலங்கைத் தூதுவர் துஷார ரோட்ரிகோ, பிராம்டன் நகர மெயர் பாட்ரிக் பிரவுனுக்கு கடிதம் எழுதி, இந்த நினைவகம் “சமுதாய ஒற்றுமையை பாதிக்கும்” என வாதிட்டார். ஆனால் மெயர் பாட்ரிக் உறுதியாக மறுத்து, இது வரலாற்று உண்மையைச் சொல்வது, தமிழர்களின் உரிமை எனக் கூறினார். இதற்கு மேலும், இலங்கை அரசின் வெளிநாட்டு தலையீட்டும் கனடா புலனாய்வு அமைப்புகளிடம் புகார் செய்யப்பட்டிருந்தது.
■.தமிழ் சமூகத்தின் கடும் எதிரொலி
இந்த சேதப்பாடுகள் தமிழ் சமூகத்தில் கடும் சோகத்தையும், கோபத்தையும் கிளப்பியுள்ளது. கனடா தமிழ் காங்கிரஸும் பிற சமூக அமைப்புகளும் இந்தச் செயலை வன்மையாகக் கண்டிக்கின்றன. இது தமிழர்களின் வரலாற்றையும், அடையாளத்தையும் அழிக்க சிங்கள இனவாதம் மேற்கொள்கின்ற தொடர்ச்சியான நடவடிக்கையாகவே காணப்படுகிறது.
■.மறுசீரமைப்பு மற்றும் எதிர்கால நடவடிக்கைகள்
நினைவகத்தினை விரைவில் மீள கட்டமைப்பதற்கான முயற்சிகள் துவங்கியுள்ளன. தமிழ் சமூகத்துடன் நகராட்சி அதிகாரிகள் இணைந்து நினைவகத்தை பாதுகாக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
■.வரலாற்றை அழிக்க நினைத்தாலும், தமிழின் நினைவுகளை அழிக்க முடியாது!
முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் நினைவாக அமையும் இந்த நினைவகம் மீதான தாக்குதல், உலக மக்கள் மத்தியில் சிங்கள இனவாதத்தின் அருவகையை மீண்டும் ஒருமுறை வெளிக்கொணர்கிறது. தமிழர் இனத்தின் மீது நடத்திய கொடூரத்தை மறைக்க முடியாது. உலகமே அதை அறிந்து கொண்டிருக்கிறது. இன அழிப்பை உலகத்திற்கு நினைவுபடுத்தும் இந்த நினைவகத்தின் அழிவே, சிங்களம் இன்றும் அந்த பழைய வெறிகொண்ட சிந்தனையில்தான் இருக்கிறது என்பதை நிரூபிக்கிறது.
□ ஈழத்து நிலவன் □