மே 10 முதல் 19 ஆம் திகதி வரை மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கை 36 பேர் கைது!
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 36 பேர் கைது செய்யப்பட்டனர்.

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 36 பேர் கைது செய்யப்பட்டனர்.
கடற்படையினர் கடற்றொழில் பரிசோதகர்களுடன் இணைந்து மட்டக்களப்பு கொட்டுவடம், திருகோணமலை சல்லிக்கோவில், ஏறக்கண்டி, எலிபன்ட் அய்லேண்ட், நந்திக்கடல், கல்லடி, பருத்தித்துறை மற்றும் முல்லைத்தீவு அலம்பில் கடற்பரப்பை அன்மித்த கடற்பரப்பில் மே 10 முதல் 19 ஆம் திகதி வரை மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் மூலம், சட்டவிரோத உபகரணங்களைப் பயன்படுத்தி சட்டவிரோதமாக மீன்பிடித்த 36 நபர்களை சட்டத்தின் முன் நிறுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
அதன்படி, இலங்கை கடற்படை கப்பல் காஷியப்ப, கோட்டாபய, விஜயபா மற்றும் உத்தர ஆகிய நிறுவனங்களின் கடற்படையினர் மீன்வள ஆய்வாளர் காரியாலயத்தின் உதவியுடன், இந்தச் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்ட 36 நபர்கள், 117 சட்டவிரோத வலைகள், 09 டிங்கிகள், 3808 கடலட்டைகள், நவீன மீன்பிடி உபகரணங்கள், சட்ட விரோத வெடிப்பொருட்கள் மற்றும் மின் விளக்கு உபகரணங்கள் ஆகியன கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.
மேலும், கைப்பற்றப்பட்ட சந்தேக நபர்கள், மீன்பிடி டிங்கிப் படகுகள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி உபகரணங்களை மட்டக்களப்பு, திருகோணமலை, முல்லைத்தீவு, மாமுனை, பருத்தித்துறை , கோட் பே மற்றும் வாகரை ஆகிய இடங்களில் உள்ள மீன்வள ஆய்வாளர் அலுவலகங்களுக்கு மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டள்ளது