பலதும் பத்தும் 19,02,2025 :- சினிமா குசும்புகள்.
.

- கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடித்த அமரன் திரைப்படம் 350 கோடி வரை வசூல் செய்தது. கடந்த ஆண்டு வெளியான படங்களிலேயே விஜய்யின் கோட் படத்திற்கு பிறகு அதிக வசூல் ஈட்டிய படமாக அமரன் படம் மாறியது குறிப்பிடத்தக்கது.
- இசைஞானி இளையராஜா இசையில் கடைசியாக விடுதலை படத்தின் இரண்டாவது பாகம் வெளியானது. படமும், இசையும் ரசிகர்களால் வெகுவாக கொண்டாடப்பட்டது. அதேபோல் அந்தப் படத்துக்கு அடுத்ததாக தினசரி என்ற படத்துக்கு இசையமைத்தார். ஆனால் பெரிதாக கண்டுகொள்ளப்படவில்லை. இந்நிலையில் இந்திய அளவி பிரபலமான நடிகர் அனில் கபூரின் ட்வீட் ஒன்று ட்ரெண்டாகியிருக்கிறது.
- அமரன் படத்தின் 100வது நாள் வெற்றி விழா நிகழ்ச்சி நேற்று சென்னையில் நடைபெற்றது. பத்திரிகையாளர்களுக்கு அழைப்பு விடுக்காதது சர்ச்சைகளை கிளப்பியுள்ள நிலையில், அமரன் படத்தின் 100வது நாள் விழாவில் சிவகார்த்திகேயன் சில தயாரிப்பாளர்கள் சம்பளத்தை பாதி புடுங்கிடுறாங்க என பேசியது பரபரப்பை கிளப்பியுள்ளது.
- இளையராஜா முதல் படமான அன்னக்கிளியிலேயே அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். பாடல்களை கேட்ட பலரும் அட இது நம்ம ஊர் இசை மாதிரி இருக்கே என்று சிலாகிக ஆரம்பித்தனர். இளையராஜாவின் இசை இன்று உலகம் முழுக்க பயணித்துக்கொண்டிருக்கிறது. ஆனால் அவரது இசை பயணம் முதலில் ஆரம்பித்தது கம்யூனிஸ்ட் மேடைகளில். தனது மூத்த சகோதரரான பாவலர் வரதராஜன் நடத்திய பாவலர் க்ரூப்ஸ் என்ற இசை குழுவை நடத்திக்கொண்டிருந்தார். அந்தக் குழுவில் வாசிப்பாளராக இருந்தவர் இளையராஜா.
- அமரன் படத்தின் வசூலை ஒரு வாரத்தில் அஜித் குமாரின் விடாமுயற்சி படம் முறியடித்துவிடும் என அஜித் ரசிகர்கள் சொல்லி வந்த நிலையில், விடாமுயற்சி படம் வெளியாகி முதல் வாரமே திரையரங்குகளில் ஹவுஸ் ஃபுல்லாக ஓடாமல் தத்தளித்து 2வது வாரத்தில் தியேட்டர்களே காலியாக கிடக்கும் நிலை தான் உருவாகியுள்ளது என சிவகார்த்திகேயன் ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். சிவகார்த்திகேயன் பிக் லீக்கிற்கு வந்துவிட்டார். அஜித் குமார் தான் இன்னும் 200 கோடி வசூலை கூட தொடமுடியாமல் தவிக்கிறார் என்கின்றனர்.
- GOAT படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே ஹெச். வினோத் இயக்கத்தில் நடிப்பதற்கு கமிட்டானார் விஜய். இதற்கிடையே தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியையும் தொடங்கினார். மக்களவைத் தேர்தலில் அந்தக் கட்சி போட்டியிடாவிட்டாலும் 2026ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் அக்கட்சி களமாட இருக்கிறது. கண்டிப்பாக விஜய்யை வெல்ல வைத்து சட்டப்பேரவைக்கு அனுப்ப வேண்டும் என்று அவரது கட்சியினர் துடித்துக்கொண்டிருக்கின்றனர்.
- கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் மட்டும் தான் தனக்கு படம் வெளியாவதற்கு 6 மாதங்கள் முன்னதாகவே முழு சம்பளத்தையும் கொடுத்தனர் என்றும் பல சினிமா தயாரிப்பு நிறுவனங்கள் சரியாக சம்பளம் கொடுப்பதில்லை என்றும் படம் வெளியாகும் போது பாதி சம்பளத்தை புடுங்கிட்டு போயிடுறாங்க என்றும் சிவகார்த்திகேயன் பேசியுள்ளார்.
- பிரபல நடிகர் அனில் கபூர் தனது எக்ஸ் தள பக்கத்தில் பல்லவி அனு பல்லவி படத்தின் ஹிந்தி ரீமேக்கில் இருக்கும் ஒரு பாடலை பகிர்ந்து, "இளையராஜாவின் மெல்லிசை 42 ஆண்டுகளை கடந்தாலும் இன்னமும் அதேபோல் ஒலிக்கின்றன. 42 ஆண்டுகளை கடந்தாலும் பல்லவி அனு பல்லவியின் இசை காலத்தால் அழியாதது" என்று குறிப்பிட்டிருக்கிறார். அவரது இந்த ட்வீட் தற்போது பயங்கரமாக ட்ரெண்டாகியிருக்கிறது.
- ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் கடைசி படம் ஜன நாயகன். இதில் அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். மேலும் பாபி தியோல், மமிதா பைஜு, விருமாண்டி அபிராமி உள்ளிட்டோரும் நடிக்கிறார்கள். படத்திலிருந்து இரண்டு போஸ்டர்கள் கடந்த மாதம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றன. அதனை பார்க்கையில் இந்தப் படம் அரசியல் ஜானரில் உருவாகலாம் என்ற கருத்து பலரிடம் நிலவிவருகிறது.