கருத்தடை மாத்திரைகள் அதிகம் எடுத்துக்கொண்டால் அபாயம்; ஆய்வின் முடிவில் வெளியான அதிர்ச்சி
,

உலகெங்கும் அதிகளவில் பயன்படுத்தப்படும் கருத்தடை மாத்திரைகள் மாரடைப்பு, பக்கவாதம் ஆகிய பாதிப்புகளை ஏற்படுத்த வாய்ப்பு இருப்பதாக டென்மார்க் நாட்டில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவுகளில் அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.
டென்மார்க் நாட்டில் 1996ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில், 15-49 வயதுடைய 20 லட்சத்துக்கும் அதிகமாக பெண்களின் மருத்துவ அறிக்கையை ஆய்வுக்குட்படுத்தி ஆய்வறிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதில் பெண்கள் கருத்தடை மாத்திரைகள் அடிக்கடி உட்கொள்வதால் மாரடைப்பு, பக்கவாதம் போன்ற பாதிப்புகள் ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாத்திரைகள், உடலுக்குள் பொறுத்திக்கொள்ளும் பொருட்கள், ஊசிகள் உள்ளிட்ட கருத்தடை நடைமுறைகளை அடிக்கடி பயன்படுத்துவதால் உடல் ரீதியான பாதிப்புகள் ஏற்படும் என ஏற்கெனவே அச்சங்கள் இருந்தாலும், அது ஆதாரங்கள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளதாக ஆய்வறிக்கை கூறியுள்ளது.
உலகம் முழுவதும் ஒரு வருடத்திற்கு கருத்தடை மாத்திரையைப் பயன்படுத்தும் ஒவ்வொரு 4,760 பெண்களுக்கு மற்ற நோய்களுடன் கூடுதலாக பக்கவாதமும், ஒவ்வொரு வருடமும் பயன்படுத்தும் ஒவ்வொரு 10,000 பெண்களுக்கும் ஒரு கூடுதல் மாரடைப்பும் ஏற்படுகிறது. இதுபோன்ற கருத்தடைகளின் பரவலான பயன்பாட்டைக் கருத்தில் கொண்டு, சுகாதார நிபுணர்கள் அவற்றை பரிந்துரைக்கும்போது இந்த சாத்தியமான அபாயங்களைக் கருத்தில் கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.