குரல் வள பயிற்சி பட்டறை
குரல் வள பயிற்சி பட்டறை
குரல்வளப் பயிற்சிப்பட்டறை
-------------------------------------------
பேரன்பிற்கும் பெருமரியாதைக்குமுரிய அனைத்துக் கலையுள்ளங்களுக்கும் வணக்கம்.
- 20, 21- 04-2024 ஆகிய இரு நாட்களில், சனி அன்று காலை 11,00 மணியளவில், பயிற்சி பெறும் இளையோர், பெரியோர் யாவரும் தமது பெயர்களை உடன் பதிவு செய்யும் வசதி செய்யப்பட்டுள்ளது.
- 30 இளையவர்களும், 10 பெரியவர்களுமாக மொத்தம் 40 பயனர்கள் மட்டுமே பயிற்சி பெறும் வசதியுண்டு.
- சனி, ஞாயிறு ஆகிய இரு நாட்களிலும், காலை 11,00 மணியிலிருந்து, மாலை 6,00 மணிவரை, தனித்தனியாகவும் குழுவாகவும் மொத்தமாகவும், பயனர்களுக்கு ஏற்றவாறு அமையும், ஆறுதலுக்கான நேர இடைவெளிகளோடு பயிற்சி இடம்பெறும்.
- இரண்டு நாட்களுக்குமான பயிற்சிக் கட்டணம் 40,00 யூறோக்கள். விருப்பத்தின் பேரிலான சான்றிதழ் பெற 10 யூறோக்கள்.
- தயைகூர்ந்து அனைவரையும் தத்தமது உணவினை எடுத்து வருமாறு பணிவன்புடன் வேண்டுகிறோம். (பயனர்களின் எண்ணிக்கை தெரியாதபடியால் இவற்றை ஆயத்தம் செய்யமுடியவில்லை. மன்னிக்கவும்)
- இளையோருக்குப் பொறுப்பானவர்கள் தவிர, பார்வையாளர்கள் தவிர்க்கப்படுகிறார்கள்.
- இக்கலைப் பயணம் அதியுச்ச பயனையடைய உங்கள் அனைவரினதும் ஒத்துழைப்பை வேண்டுகிறோம்.
பயிற்சி மண்டப முகவரி
03 PLACE SAINT JEAN
75017 PARIS
Metro lingne 13 La Fourche
Bus - 54, 74, 21
தமிழர் புனர்வாழ்வுக் கழகம்
பிரான்சு