Breaking News
சுற்றுலா பயணிகளுக்கு விருந்தினர் விசா வழங்கும் சேவை, VFS Global எனும் வெளிநாட்டு நிறுவனத்திற்கு கைமாற்றி உள்ளார்கள்.
எந்த இலாபமன்றி 12 ஆண்டுகளாக வழங்கிய online visa

சுற்றுலா பயணிகளுக்கு விருந்தினர் விசா வழங்கும் சேவை
சுற்றுலா பயணிகளுக்கு விருந்தினர் விசா வழங்கும் சேவை SLT Mobitel PLC நிறுவனத்திடமிருந்து VFS Global எனும் வெளிநாட்டு நிறுவனத்திற்கு கைமாற்றி உள்ளார்கள்.
அதாவது Mobitel எந்த இலாபமன்றி 12 ஆண்டுகளாக வழங்கிய online visa சேவையை VFS Global க்கு கைமாற்றி உள்ளார்கள். இது தொடர்பில் Tiran Alas முன்வைத்த அமைச்சரவை பத்திரத்திற்கு திரு ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான அமைச்சரவை அங்கீகாரம் வழங்கி உள்ளது.
இதன் காரணமாக விசா சேவை கட்டணம் 2477% அதிகரிக்கப்பட்டள்ளது. அதாவது வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவருக்கு விசா சேவை கட்டணம் 1 டொலரிலிருந்து 25.77 டொலராக அதிகரித்துள்ளது ($18.5 + convenience) இதனூடாக VFS Global என்கிற வெளிநாட்டு நிறுவனம் இலங்கை சுற்றுல்லா பயணிகளிடம் ஆண்டு ஒன்றுக்கு 12.76 பில்லியன் ரூபா வருமானம் உழைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அரச நடைமுறைகளுக்கு மாறாக குறிப்பாக எவ்விதமான கேள்விப்பத்திர நடைமுறைகளை பின்பற்றமால் மாற்றங்களை செய்துள்ளார்கள்.
மேற்படி விசா சேவையை வழங்க VFS Global ரூபா 60 பில்லியன் முதலீடு செய்திருப்பதாக சொல்லப்படுகின்ற போதும் விசா சேவைக்காக 24 கரட் தங்கத்தில் கணினி வலை அமைப்புகளை பயன்படுத்தினாலும் கூட ரூபா 60 பில்லியன் முதலிட வேண்டியதில்லை என்பதை நிபுணர்கள் அம்பலப்படுத்தியுள்ளார்கள். மறுபுறம் மேற்படி மாற்றங்கள் காரணமாக வெளிநாட்டு சுற்றலா பயணி ஒருவர் சுற்றலா விசா ஒன்றுக்கு 100.77 அமெரிக்கா டொலர் செலவழிக்க வேண்டி ஏற்பட்டுள்ளது. இதனால் 4 பேர் கொண்ட குடும்பம் விசாவிற்காக மட்டும் 400 அமெரிக்கா டொலர் செலவழிக்க வேண்டி ஏற்பட்டுள்ளது.
பொருளாதார சீரழிவிற்க்கு பிறகு இலங்கை பொருளாதாரம் கடன், புலம்பெயர் இலங்கையர் அனுப்பும் பணம் மற்றும் சுற்றுல்லா பயணிகளிடம் மட்டுமே தங்கி இருக்கின்றது. இவ் ஆண்டு 2.4 மில்லியன் சுற்றுல்லா பயணிகளை எதிர்பார்த்துள்ள நிலையில் இந்த மோசடியுடாக சுற்றுலா பயணிகளிடம் விசா சேவை கட்டணம் என்கிற பெயரில் அதிக கட்டணம் வசூலிக்க முயற்சிப்பதால் சுற்றுலா துறையை ஆபத்தில் தள்ளியுள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. கெஹலிய ரம்புக்வெல்ல ரூபா 130 மில்லியன் பெறுமதியான தரமற்ற மருந்து இறக்குமதியில் சிக்கிய பொது அவரை காப்பாற்ற ரணில் விக்ரமசிங்கே முயற்சித்தார். ஜப்பான் நிறுவனத்திடம் லஞ்சம் கேட்ட நிமால் ஸ்ரீபாலடிசில்வாவை காப்பாற்றினார்.
டக்ளஸ் தேவானந்தாவின் கடற்தொழில் அமைச்சு எவ்வித முறையான கொள்முதல் நடவடிக்கையின்றி 12,000 கிலோவுக்கும் அதிகமான மீன்களை சீனாவிடமிருந்து இறக்குமதி செய்த போது அமைதியாக இருந்தார். தற்போது அமைச்சர் Tiran Alas மத்திய வங்கி பிணை முறி மோசடிக்கு இணையான 12.76 பில்லியன் ரூபா விசா மோசடியில் சிக்கியுள்ளார். இதற்கு திரு ரணில் விக்கிரமசிங்கே தலைமையில் அமைச்சரவையும் அனுமதி வழங்கியுள்ளது. இலங்கை தீவில் மோசடிகள் Normalize செய்யப்பட்டுள்ளது. இதனால் தான் பொருளாதார சீரழிவிற்கு பின்னரும் கூட கூச்சமில்லாமல் திருடுகின்றார்கள்.