நிறையப் பாடல்களுக்கு முதல் வரியைக் கொடுத்தது இசைஞானி
வைரமுத்துவின் ஏழு “தேசிய விருது”கள்!. ப. சிதம்பரத்துக்கே வெளிச்சம்.
3.jpeg)
ப.சிதம்பரத்திற்கே வெளிச்சம்.
Dr. தமிழ் சிலம்பரசன் இசையை ஆய்வுசெய்து “A book on suruthi” என்கிற புத்தகத்தை வெளியிட்ட தமிழிசையின் தந்தை ஆபிரகாம் பண்டிதரின் இரண்டாவது மகனான, ஜோதி_பாண்டியனிடம் இசைப் பயின்றவர்தான் “தன்ராஜ்”, பிறகு தன்ராஜ்_மாஸ்டர் என்று அழைக்கப்பட்டார்.தன்ராஜ் மாஸ்டரிம்தான் இசைஞானி அவர்கள் இசை நுணுக்கங்களைப் பயின்றார். ஆபிரகாம் பண்டிதரின்நான்காவது தலைமுறை இசை வாரிசுதான் இசைஞானி. தமிழ் மொழியைத்தாண்டி வைரமுத்துவை யாருக்கும் தெரிந்து இருக்க வாய்ப்பில்லை. ஆனால் இசைஞானியைமொழிகளைக் கடந்தும் அவரது இசையை உலகம் அறியும் என்பதை,
சுயமாகத் தனது வாழ்க்கை வரலாற்றைத் தவிர ஒரே ஒரு படைப்பைக்கூடத் தமிழில் படைக்காத கருணாநிதி தான் எனது தமிழ் ஆசான் என்று கூறிய வைரமுத்துகளுக்குத் தெரிந்து இருக்க வாய்ப்பு இல்லைதான்.நிறையப் பாடல்களுக்கு முதல் வரியைக் கொடுத்தது இசைஞானி என்பதை திரைத்துறையில் அறியாதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். இசைஞானி மொழியையும் கற்றுத்தேர்ந்தவர் என்பதை கமல்ஹாசனும், இசைஞானிக்கு வெண்பாவே எழுதத் தெரியும் என்பதைக் காவிய கவிஞர் வாலியும் குறிப்பிட்டு இருக்கிறார்கள். வைரமுத்துக்குத் திமிறு இல்லை அது கம்பீரம் என்றால் வைரமுத்து போன்ற மனிதர்களைக் கொஞ்சம்கூட கண்டுக்கொள்ளமால் பயணிக்கும் இசைஞானியின் “கர்வம்தான்” தமிழ் இசையின் அடையாளம். வைரமுத்துவின் ஏழு “தேசிய விருது”கள் ப. சிதம்பரத்துக்கே வெளிச்சம்.
ஆதிதமிழனின் ஆதி இசையின் அடையாளம் இசைஞானி.
இசைக்கு நேரம் ஒதுக்காத ஒருவனின் பதிவு இது.