Breaking News
தங்களோடு வாழ்ந்து, தங்கள் நலனுக்காக போரிட்டு உயிர்நீத்த சக மனிதர்களுக்கு ‘நடுகல்’
” நடுகல் வழிபாடு.

” நடுகல் வழிபாடு "
.தங்களோடு வாழ்ந்து, தங்கள் நலனுக்காக போரிட்டு உயிர்நீத்த சக மனிதர்களுக்கு ‘நடுகல்’ எழுப்பி, படையலிட்டு, பூசனைகள் செய்து வழிபடும் முறை பண்டைத் தமிழரிடம் மேலோங்கி இருந்தது. தொல்காப்பிய பாடலொன்று இதனை சிறப்பித்துக் கூறுகின்றது.
' வாள்மலைந்து எழுந்தோனை
மகிழ்ந்துபறை தூங்க
நாடவற்கு அருளிய பிள்ளை யாட்டும்
காட்சி கால்கோள் நீர்ப்படை நடுகல்
சீர்த்த மரபில் பெரும்படை
வாழ்த்தலென்று..'
லி(தொல். பொருள். 63)
பெண்களுக்கு நடுகல் அமைக்கப்பட்ட வரலாறு எதுவும் இலக்கியங்களில் பதியப்படவில்லை. ஆனால், சிலப்பதிகார கதை நாயகி கண்ணகிக்கு சேரன் செங்குட்டுவன் நடுகல் நட்டு வழிபடும் முறையை தோற்றுவித்தான். அதற்கு பூசைகள் செய்ய ‘தேவந்தி’ என்ற பெண்ணை செங்குட்டுவன் நியமித்ததாகவும் சிலப்பதிகாரம் தெரிவிக்கின்றது.