Breaking News
தனிச் சிங்கள சட்டத்தை எதிர்த்து பதவியை தூக்கி எறிந்த ஈழவேந்தன் அவர்களுக்கு அஞ்சலி!
மா.க.ஈழவேந்தன் அவர்களுக்கு அஞ்சலி! தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்ப்பாண அலுவலகத்தில் நடைபெற்றது.

தனிச் சிங்கள சட்டத்தை எதிர்த்து பதவியை தூக்கி எறிந்த ஈழவேந்தன் அவர்களுக்கு அஞ்சலி!
1956 இல் தனிச் சிங்களச் சட்டத்தை எதிர்த்துத் தன் மத்திய வங்கி உயர் பணியைத் தூக்கியெறிந்த தன்மானத் தமிழன் மா.க.ஈழவேந்தன் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்றையதினம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்ப்பாண அலுவலகத்தில் நடைபெற்றது.
இதன்போது ஈகைச் சுடர் ஏற்றப்பட்டு, அன்னாரின் திருவுருவப் படத்திற்கு மலர்மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த அஞ்சலி நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன், கட்சியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ் மற்றும் கட்சியின் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.