Breaking News
சிவத்தமிழ்செல்வி தங்கம்மா #அப்பாக்குட்டியின் 99வது பிறந்தநாள்
#சிவபூமி அறக்கட்டளையின் தவைலா் செஞ்சொற்செல்வா் அவா்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்த சமயத்தில் சிவபூமி முதியோா் இல்லத்தில் இருந்து அவருக்கு அவசர தகவல் ஒன்று வந்து சோா்ந்தது.

சிவத்தமிழ்செல்வி தங்கம்மா #அப்பாக்குட்டியின் 99வது பிறந்தநாள் அறக்கொடை விழாவிற்குாிய ஏற்பாடுகளில்,
#சிவபூமி அறக்கட்டளையின் தவைலா் செஞ்சொற்செல்வா் அவா்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்த சமயத்தில் சிவபூமி முதியோா் இல்லத்தில் இருந்து அவருக்கு அவசர தகவல் ஒன்று வந்து சோா்ந்தது.
முதியோா் இல்லத்தில் இருந்த வயாதான பெண் ஒருவா் இறந்து விட்டாா் என்பதே அந்த அவசர தகவல்.
ஆனால் இறந்த வயதான பெண்ணிற்குாிய இறுதிக் கிாியைகளை மேற்கொள்வதற்கு உறவினா்கள் எவரும் இருக்கவில்லை.
உடனே செஞ்சொற்செல்வா் அவா்கள் முதியோா் இல்லத்திற்கு சென்று சகல கிாியைகளையும் தானே ஒரு உறவினா் போல நின்று நிறைவேற்றி முடித்துவிட்டு மீண்டும் தனது முந்தைய கடமைக்காக திரும்பினாா்.
சிலா் செஞ்சொற்செல்வாிடம் உறவினா்கள் இல்லாத இந்த உடலை அரச செலவில் தகனம் செய்திருக்கலாமே என வினவினா்.
அதற்கு செஞ்சொற்செல்வா் அவா்கள் எங்கள் இல்லத்தில் அனாதை என்று எவரும் இருக்க கூடாது.
எங்கள் இல்லத்தில் உள்ள சகல முதியோா்களுக்கும் நானே உறவுக்காரன் அதனால் நானே முன்னின்று கடமைகளை மேற்கொண்டேன் என பதில் கூறினாா்.
எங்கள் இல்லத்தில் எவரும் தான் ஒரு அனாதை என்ற உணா்வுடன் வாழக்கூடாது என்பதுடன் இறந்த பின்பும் அனாதையாக போகக்கூடாது என பதில் கூறினாா்.
இவ்வாறு சிவபூமி முதியோா் இல்லத்தில் நடக்கும் பல நாறு சம்பங்களை கூறிக்கொண்டே போகலாம்.
ஆதரவற்ற உயிா்களுக்கு உதவிக்கரம் கரம் நீட்டுவதற்காக ஆரம்பிக்கப்பட்ட சிவபூமி அறக்கட்டளையின் ஒரு அங்கமாக விளங்கும் முதியோா் இல்லம் வரும் 07.04.2024ம் திகதி தனது 17வது ஆண்டு நிறைவினை கொண்டாடுகின்றது.
சிவபூமி முதியோர் இல்லம் கடந்த 07-04-2007 ஆம் ஆண்டு தொல்புரத்தில் ஆரம்பிக்கப்பட்டது. இவ்வில்லம் ஆரம்பிப்பதற்கு பேருதவி புரிந்தவர் அமெரிக்காவில் வாழும் அன்பர் திரு.சி.பாலச்சந்திரன் அவா்கள் ஆவா்.
சகல வசதிகளுடன் ஆதரவற்ற பல முதியோர்கள் (ஆண் பெண் இருபாலாரும் ) மகிழ்வுடன் வசிக்கின்றார்கள்.
தொல்புரம் சிவபூமி முதியோர் இல்லத்தில் ஆன்மீகச் சுடர் ரிசி தொண்டுநாத சுவாமி அவர்களின் உதவியால் நூல் நிலையம் மருந்தகம் அமைக்கப்பட்டுள்ளது.
முதியோர் இல்லத்தில் ஆலயம் ஒரு சிறிய திரையரங்கு மற்றும் பல வசதிகளுடன் அவர்கள் இனிதே வாழ்ந்து வருகின்றனர்.
இதன் பின்னா் கீாிமலையில் மற்றுமொரு முதியோா் இல்லம் ஆரம்பிக்கப்பட்டு பல முதியவா்கள் வசித்து வருகின்றாா்கள்.
தா்ம சிந்தனையும், கருணையும், பிற உயிா்களுக்கு உதவி செய்யும் பக்குவ குணமும் மங்கி போயுள்ள தற்கால உலகில்,
எமது மண்ணில் அறப்பணி செய்யும் சிறந்த நிறுவனமான சிவபூமி அறக்கட்ளைக்கு தாராள மனம் படைத்த உள்ளங்கள் உதவலாம்.
சிவபூமி அறக்கட்டளையின் ஹட்டன் நசனல் வங்கியின் 117010003432 என்ற கணக்கு இலக்கத்திற்கோ அல்லது 117020039455 என்ற இலக்கத்திற்கோ தங்களின் உதவிகளை பணமாக அனுப்பி வைக்க முடியும்.
அல்லது சிவபூமி அறக்கட்டளையின் அலுவலகத்திலும் நேரடியாக உதவிகளை வழங்க முடியும்.
எங்கள் மண்ணில் அறப்பணி செய்யும் சிவபூமி அறக்கட்டளையின் பல்வேறு சமூக நலப் பணிகள் இன்று பலராலும் வியப்புடன் பாராட்டப்படுகின்றது.
சிவபூமி அறக்கட்டளை (இலங்கை அறக்கட்டளைச் சட்டத்தின் கீழ்பதிவு செய்யப்பட்டது) எம்மண்ணில் வாழும் உறவுகளுக்கு உதவும் பொருட்டு ஜீவசேவைக்காக 2004ம் ஆண்டு சிவபூமி அறக்கட்டளை நிறுவனம் உருவாக்கப்பட்டது.
உங்கள் அனைவரது ஆசியாலும் ஒத்துழைப்பாலும தன்பணியை விரிவாக்கி சிறப்புடன் செயற்பட்டடு வருகிறது.
சிவபூமி அறக்கட்டளையில் அங்கம் வகிப்பவர்களின் பேருதவியாலும் பணியாளர்களின் பக்தியோடு கூடிய சேவையாலும் எமது திட்டங்கள் யாவும் சீரிய முறையில் நடைபெற்று வருகிறது.
அன்புள்ளங்களே என்றும் உங்கள் அன்பும் ஆசியும் ஆதரவும் எமக்கு கிடைக்கவேண்டுமென வேண்டி நிற்கின்றனா் சிவபூமி அறக்கட்டளை நிறுவனத்தினா்.
சிறப்புஈனும் செல்வமும்
ஈனும் அறத்தினூஉங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு.
(குறள்)
பொருள்-சிறப்பையும், செழிப்பையும் தரக்கூடிய அறவழி ஒன்றைத்தவிர ஆக்கமளிக்கக் கூடிய வழி வேறென்ன இருக்கிறது?.
கோடான கோடி நன்றிகள் சிவபூமி அமைப்பிற்கு..