உக்ரேனிய தலைவர் செலன்ஸ்கியை கொலை செய்ய முயற்சி!, இரண்டு இரஸ்சிய ஏஜென்ட்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உக்கிரன் தரப்பு தெரிவிப்பு.

உக்ரேனிய தலைவர் செலன்ஸ்கியை கொலை செய்ய முயற்சி!, இரண்டு இரஸ்சிய ஏஜென்ட்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உக்ரேனிய தலைவர் செலன்ஸ்கியை கொலை செய்ய முயற்சித்ததாக ரெண்டு ரஸ்சிய ஏஜென்ட்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 2023 கோடை காலத்திற்குப் பின்னர் போதிய அளவு வெடி மருந்துகள் தமக்கு கிடைக்கவில்லை என உக்ரேனிய இராணுவம் வருத்தம் தெரிவித்துள்ளது புதிய அமெரிக்க உதவிகள் நமக்கு கிடைக்கும் என அவர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள், அதே வேலை ரசிய தொழிற்சாலைகள் போதிய அளவு வெடி மருந்துகளை உற்பத்தி செய்வதாக தெரிய வந்துள்ளது .
அமெரிக்க அரசு சார்பற்ற நிறுவனமான கிரீடம் ஹவுஸ் எனப்படும் அமைப்பை ரஷ்யா தடை செய்துள்ளது. இந்த ஸ்தாபனம் அமெரிக்காவின் முக்கிய செயல்பாடுகளை உலகம் பூராகவும் முதன்மைப்படுத்துவதற்கு பிரச்சாரம் செய்து வருகின்றது என ரஷ்ய அரசசட்டத்தரப்பு தெரிவித்துள்ளது.இந்த இந்த ஸ்தாபனம் உக்ரேனிய போரில் ரஷ்ய படைகளின் செயற்பாடுகளை தரக்குறைவாக பிரச்சாரம் செய்வதில் கடுமையாக ஈடுபட்டு உள்ளது என அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
சென்ற ஆண்டு கோடை காலத்தில் ரஷ்யா , பெலோரசிய எல்லைப் பகுதிகளில் எனது தந்திரோபாய அணு ஏவுகணைகளை நிலை நிறுத்தி வைத்திருந்தது, தற்பொழுது அவற்றின் செயற்பாடுகளை உறுதி செய்வதற்காக பயிற்சிகளை மேற்கொள்வதாக பெலோரசியா அறிவித்துள்ளது.