Breaking News
முள்ளிவாய்கால் நிகழ்வுகள் பற்றிய விளக்கம் அதே போல பேரணியில் எமது தேசியக்கொடியினை பயன்படுத்துவது பற்றியும்.
பாரிசு 10 காவல்துறை Commissaire உடனான சந்திப்பு நடைபெற்றது.

முள்ளிவாய்கால் நிகழ்வுகள் பற்றிய விளக்கம்.
இன்று 10.05.2024 பாரிசு 10 காவல்துறை Commissaire உடனான சந்திப்பு நடைபெற்றது. இச் சந்திப்பில் எதிர் வரும் 18 மே 2024 முள்ளிவாய்கால் நிகழ்வுகள் பற்றிய விளக்கம் அதே போல பேரணியில் எமது தேசியக்கொடியினை பயன்படுத்துவது பற்றிய அதற்கான அனுமதி போன்ற விடயங்கள் கலந்துரையாடப்பட்டு அதற்கான அனுமதிகள் பெறப்பட்டன.
அதைவிட லாச்சப்பல் பகுதியினை மே 18 அன்று வர்த்தக நிறுவனங்களுக்கு முன்பாக கறுப்பு பலூன்கள் கட்டி எமது முள்ளிவாய்கால் நினைவினை வேற்று இன மக்களுக்கு வெளிப்படுத்துபவை போன்ற விடயங்களுக்கும் முறையான அனுமதிகளை இன்று நாம் பெற்றுக்கொண்டோம். அதே போல எதிர் வரும் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் காலத்தில் எமது லாச்சப்பல் பகுதியினை நகரசபையுடன் இணைந்து எவ்வாறு அழகுபடுத்துவது. மற்றும் தூய்மையாக வைத்திருப்பது போன்ற விடயங்களும் கலந்துரையாடப்பட்டது. இனி வரும் நாட்களில் இன்னும் சில சந்திப்புக்களை நகரசபையுடன் செய்வதற்கான வழி முறைகளையும் செய்து தந்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
"இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை"