Breaking News
அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங்கிற்கும் மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்கவிற்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே ஜூலி சங் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இலங்கையில் வலுவான பொருளாதாரம்; உறுதியளித்துள்ள அமெரிக்கா.

இலங்கையில் வலுவான பொருளாதாரம்; உறுதியளித்துள்ள அமெரிக்கா.
இலங்கையில் வலுவான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கு அமெரிக்கா தொடர்ந்து ஆதரவளிக்கும் என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் உறுதியளித்துள்ளார்.
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங்கிற்கும் மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்கவிற்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே ஜூலி சங் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
குறித்த சந்திப்பின் போது, தற்போது நடைமுறைப்படுத்தப்படும் சீர்திருத்தங்கள் குறித்தும் இருதரப்பு உறவுகள், கடன் மறுசீரமைப்பு தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பு அமெரிக்கத் தூதரகத்தில் இடம்பெற்றுள்ளதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.