காணாமல் போனவர்கள் தொடர்பான விசாரணைகளில் சிறிய முன்னேற்றமும் ஏற்படவில்லை.
2023 இல் உலக நாடுகளில் மனித உரிமை நிலவரம் குறித்த தனது வருடாந்த அறிக்கையில் அமெரிக்க இராஜாங்க திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.

காணாமல் போனவர்கள் தொடர்பான விசாரணைகளில் சிறிய முன்னேற்றமும் ஏற்படவில்லை.
2023 இல் உலக நாடுகளில் மனித உரிமை நிலவரம் குறித்த தனது வருடாந்த அறிக்கையில் அமெரிக்க இராஜாங்க திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.
1983ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டுவரை இடம்பெற்ற மனித உரிமை துஸ்பிரயோகங்கள் தொடர்பிலான விசாரணைகளில் சிறிதளவு முன்னேற்றம் இல்லை அதேபோல 1988-89 ஜேவிபி கிளர்ச்சிகாலத்தில் இடம்பெற்ற மனித உரிமை துஸ்பிரயோகங்கள் குறித்த விசாரணைகளிலும் எந்த முன்னேற்றமும் இல்லை என அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதிகளவில் கவனத்தை ஈர்த்;த காணாமல்போன சம்பவங்கள் குறித்த விசாரணைகளிலும் முன்னேற்றம் இல்லை எனவும் அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.
முன்னாள் கடற்படை தளபதி வசந்த கராணகொட தொடர்புபட்ட 2008 – 2009 இல் கொழும்பில் 11 தனிநபர்கள் கடத்தப்பட்டு காணாமல்போன சம்பவம் தொடர்பிலான விசாரணைகளில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை.
எனினும் மனித உரிமை மீறல்கள் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புபடாத காரணங்களிற்காக ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க வடமேல்மாகாண ஆளுநர் பதவியிலிருந்து கரணாகொடவை நீக்கினார் என அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்;துள்ளது.