கதிர்காமம் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பம்...!
சந்நிதி முருகனின் வேல்ப் பயணம் இன்று மாலை சந்நிதியான் ஆலயத்தில் நடைபெற்றது.

கதிர்காமம் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பம்...!
வரலாற்றுச் சிறப்புமிகு கதிர்காமம் வருடாந்த திருவிழா / றுஹீணு மகா கதரகம தேவாலயத்தின் வருடாநந்த எசல பெரஹெரா இன்றையதினம் (June 26) "சர்வகாமிகா புனித பூமியான" கதிர்காமத்தில் உள்ள முஸ்லிம் மசூதியில் முன் பௌத்த இந்து இஸ்லாமிய மதகுருமார்கள் இணைந்து நடாத்திய கொடியேற்ற சடங்குடன் ஆரம்பமாகியது.
இன்று இரவு முதலாவது எசல பெரஹெரா ஊர்வலம் நடைபெறுகின்றது. தொடர்ந்து யூலை 11 திகதி நீர்வெட்டு ( தீர்த்த உற்சவத்துடன்) வருடாந்த திருவிழா நிறைவுபெறுகிறது.
இறை நிகழ்வு | கதிர்காம திருவிழாவிற்கான சந்நிதியான் வேல் பயணம் இன்று மாலை நடைபெற்றது...!
கதிர்காமம் திருவிழா ஆரம்பித்தலுக்கான சந்நிதி முருகனின் வேல்ப் பயணம் இன்று மாலை சந்நிதியான் ஆலயத்தில் நடைபெற்றது. ஆலய பிரதம பூசாரியினால் முருகப்பெருமானுக்கு சிறப்பு வழிபாடுகள் இடம்பெற்று கருவறையில் இருந்து வெள்ளி வேலானது எடுக்கப்பட்டு சந்தியான் ஆச்சிரமம் முன்றில் வைத்து வானில் வெள்ளி வேலானது கதிர்காமம் நோக்கி பயணிக்க விடப்பட்டது.