எதிராக செயற்பட்ட ஒருவரையும் விட்டு வைக்க மாட்டேன்! செம்மணியில் சுற்றிவளைக்கப்பட்ட இளங்குமரன் எம்.பி பகிரங்க எச்சரிக்கை!
இளங்குமரன் எம்.பி இன்றையதினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளதுடன் செம்மணியில் குழப்பத்தை ஏற்படுத்திய ஒருவரையும் விட்டு வைக்க மாட்டேன்!

கடந்த 23ஆம் திகதி செம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதி வேண்டி ஆரம்பிக்கப்பட்ட அணையா விளக்கு போராட்டத்தின் இறுதி நாளாக நேற்றைய தினம் பெருந்திரளான மக்களின் வருகையுடன் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்த, அணையா விளக்கு போராட்டத்தில் பங்கேற்பதற்காக போராட்ட களத்திற்கு சென்ற, அமைச்சர் சந்திரசேகரன், இரா.சாணக்கியன் மற்றும் சீ.வி.கே.சிவஞானம் ஆகியோர் மக்களால் அடித்து துரத்தப்பட்டனர்.
அத்துடன், செம்மணியில் நேற்று இடம்பெற்ற அணையா விளக்கு போராட்ட இடத்திற்கு வருகைதந்த நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரனையும் போராட்டக்காரர்கள் அங்கிருந்து விரட்டியடித்தனர்.
இது தொடர்பில் இளங்குமரன் எம்.பி இன்றையதினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளதுடன் செம்மணியில் குழப்பத்தை ஏற்படுத்திய ஒருவரையும் விட்டு வைக்க மாட்டேன் என பகிரங்க எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.
போராட்டக்காரர்கள், இளங்குமரனை மட்டும் துரத்தவில்லை. அரசியல், அரசியல்வாதிகள் வேண்டாம் என்று அனைவரையுமே விரட்டினார்கள். காரணம், அவர்கள் செய்வார்கள் என்று மக்கள் காத்திருந்து களைத்ததினாலேயே வேறு வழியின்றி தாமாக போராட வெளிக்கிட்டனர். அதுவரை வேடிக்கை பார்த்தவர்கள், காணாமல் இருந்தவர்கள், இன்று மனித உரிமையாளர் வருகிறார் என்றவுடன் தம்மை பிரபல்யப்படுத்தி மக்களின் போராட்டத்தை திசை திருப்ப முயல்வது வெட்கக்கேடானது. இதில பழிவாங்கப்போறாராம். நேற்று பெய்த மழைக்கு இன்று முளைத்த காளான் இவர். முதலில் மக்களுக்கு என்ன விமோசனம் பெற்றுக்கொடுத்தார்? அதை முதலில் செய்யுங்கள், மக்கள் உங்களை அழைப்பார்கள்.
இவர்கள் கூட்டமாக செல்ல,செய்ய எத்தனையோ பிரச்சினைகள் தமிழ் மக்களிடம் உள்ளது. தமது இருப்பை காட்ட வேண்டும் என்று நினைத்தால்.... தையிட்டி விகாரைக்குப் போய், தமது எதிர்ப்பை பதிவு செய்யலாம், நியாயமானதும்கூட! பொது வெளியில் பொதுமக்களுடன் பேசத்தெரியாத இவர்கள் பொது மக்களுக்கு சேவை செய்யப் போபாகிறார்களாம், நல்லது செய்யப் போகிறார்களாம்! " செம்மணியில் குழப்பத்தை ஏற்படுத்திய ஒருவரையும் விட்டு வைக்க மாட்டேன்". அரசியல் ரௌடித்தனத்தின் அசிங்கமான வடிவம்.