இஸ்ரேலுடனான வர்த்தகத்தை முடிவுக்குக் கொண்டுவர :உலக நாடுகளுக்கு ஐ.நா. நிபுணர் அழைப்பு!
.

ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பிரதேசத்தில் இனப்படுகொலை நடைபெறுவதாகக் கூறி, இஸ்ரேலுடன் அனைத்து வர்த்தக, நிதி உறவுகளையும் துண்டிக்க நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சிறப்பு அறிக்கையாளர் பிரான்செஸ்கா அல்பானீஸ் வலியுறுத்தியுள்ளார்.
ஜெனீவாவில் நடந்த மனித உரிமைகள் கவுன்சிலில் தனது அறிக்கையை சமர்ப்பித்த அவர்,
“இனப்படுகொலையின் பொருளாதாரம்” என அழைத்த வகையில், பல்வேறு நிறுவங்கள் இஸ்ரேலின் அடக்குமுறையில் நேரடியாக பங்காற்றி வருவதாகக் குற்றம்சாட்டினார்.
இந்த நிலையில், காஸாவில் இஸ்ரேலிய குடியேற்றங்கள் மற்றும் இராணுவ நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கும் 60க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் பெயர்களைக் கொண்ட தனது சமீபத்திய அறிக்கையை அல்பானீஸ் சமர்ப்பித்தார்.
இந்நிலையில், பாலஸ்தீன மக்களுக்கு நீதியை உறுதி செய்யும் வகையில் கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டிய தருணம் இது என அவர் கூறினார்.