Breaking News
எமக்காய் தம்முயிர் தந்தவர்கள்!
நெஞ்சாங் கூட்டினுள் நினைவுகள் கனக்க எங்கிருந்தாலும் எங்களின் இதயம் உங்களுக்காக துடிக்கும்!

அள்ளி அணைக்கவும் இல்லை,கொள்ளியும் வைக்கவில்லை
பெட்டியுள்ளும் நீங்கள் இல்லை,புதைகுளியும் உங்களுக்கில்லை
மண் அள்ளி போடவும் இல்லை,மலர்ப்படுக்கை அங்கு இல்லை
ஊர்வலமாய் வரும் பேழையில்,உங்கள் உடல் இருக்கவுமில்லை
நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்தில், அந்தக் கட்டடச் சிதைவுகள் இப்போதில்லை?
யாராலும் தொடப்படாமல் - ஆச்சர்ய தியாகத்தின் சின்னமாக குவிந்து கிடந்த கொங்கிரீட் துகள்களுக்குள் "தற்கொடை" தார்ப்பரியத்தின் பிரசவமும், உலகே வியந்த வீரமுமாக நிமிர்ந்து கிடந்தவன், துன்னாலையின் வல்லிபுரம் வசந்தன்.
- சத்தமிட்டு அழக்கூட முடியாமல், சுவரோடு விம்மிவெடித்த தாய்,
- வேலிப் பொட்டுகளுக்குள்ளால், இழவு விசாரிக்க வந்து பயந்து திரும்பும் சொந்தங்கள்,
- அவனை தெரியும் என்று தோளுயர்த்த கூட முடிந்திராத நண்பர்கள்,
யாவரும் யாவையும்-
அந்த உடலாயுதனின் அங்கீகாரத்துக்காக நீண்ட கடுமிரடுகள் காத்திருக்கவே நேர்ந்தது!!
"........சிறு வயதிலேயே நல்லா வாகனம் ஓடுவார்- அப்பாவார் காரை விட்டிட்டு வெளீல போயிட்டால் அப்பிடியே எடுத்திட்டு யாழ்ப்பாணம் போய், அப்பிடி போய்- இப்பிடி போய் சுத்தியடிச்சிட்டு வருவார்"
வசந்தன்,
ஹாட்லிக் கல்லூரியின் பழைய மாணவன்.
குடும்பத்தின் இரண்டாவது ஆண்மகன்.
அப்பா வல்லிபுரம் இலங்கை வங்கியின் ஊழியர்.
பிற்காலத்தில் மகிழுந்து என்று திருத்தப்பட்ட "கார்", வீட்டில் இருந்த காரணத்தால் சிறுவயதிலேயே வாகனமோட்டக் கற்றுக்கொண்டவன்.
அப்பாவுக்கு தெரியாமல் விடுமுறை தினங்களில் நண்பர்களோடு காரில் சுற்றித் திரிந்தவன்- பின்னாட்களில் வீட்டுக்கு வராமலே இருந்தான்.
"காணவில்லை" என்று தேடும் தேவையும் கவலையும் இல்லாமல் வல்லிபுரம் குடும்பம் ஏதோ நம்பிக்கையை பற்றிக் காத்திருந்தனர்.
வசந்தன் நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்துக்கு சென்றிருந்த அன்றைய நாளின் இரவு ஏழு மணியின் பேரோசையை அவனது தாயும் குடும்பத்தினரும் கேட்டார்கள்.
வசந்தனின் இன்னொரு பெயரை, வரலாறு ஆசையோடு கேட்டு எழுதி வாங்கிக் கொண்டது.
பாடசாலையில் வசந்தனின் உடல்வெடிப்பித்த கற்சிதிலங்கள் எவையும் இன்றில்லை??
ஆனாலும்,
"வல்லிபுரத்தின் பிள்ளை, ஒரு இனத்தின் எல்லை" ஆகிய கதை எங்கள் எல்லோரிடமும் பத்திரமாக தரப்பட்டது.
1970களிலேயே சொந்த வாகனம் வைத்திருக்கும், பொருளாதார வேருள்ள குடும்பத்தின் செல்லப்பையனை, உலகின் முதலாவது தற்கொடையாளனாக வார்ப்பித்த, "தாகம்" மட்டும் தூங்குவதறியாது!
முகநூல் பதிவு.