கொழும்பு காலி முகத்திடலில் பதற்றமான சூழ்நிலை!
காலி முகத்திடலில் உள்ள அங்கீகரிக்கப்படாத விற்பனை நிலையங்களை அகற்றல்!

கொழும்பு காலி முகத்திடலில் உள்ள அங்கீகரிக்கப்படாத விற்பனை நிலையங்களை அகற்றுவதற்காக நேற்று (04) மதியம் துறைமுக அபிவிருத்தி ஆலோசனை சேவைகள் தனியார் நிறுவனத்தின் அதிகாரிகள் சென்றபோது பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.
கொழும்பு காலி முகத்திடல் பகுதிக்கு துறைமுக அபிவிருத்தி ஆலோசனை சேவைகள் தனியார் நிறுவனத்தின் அதிகாரிகள் பொலிஸ் அதிகாரிகளுடன் நேற்று மதியம் வருகை தந்த போது அங்குள்ள வர்த்தகர்கள் நீண்ட காலமாக அங்கே வணிகம் செய்து வருவதாக தெரிவித்தனர்.
எனினும் பொது சுகாதாரப் பரிசோதகர்களிடமிருந்து உரிய சான்றிதழ்களைப் பெறாமல் வணிக நடவடிவடிக்கையில் ஈடுபட்டு வருவது தெரியவந்தது.
இதனால் பொது சுகாதாரப் பரிசோதகர்களின் அனுமதியுடன் பாதுகாப்பான முறையில் வணிக நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நோக்கில், காலி முகத்திடலில் வர்த்தகர்கள் அகற்றப்பட்டனர்.
இதன்போது நீண்ட காலமாக அப்பகுதியில் வணிகத்தில் ஈடுபட்டு வந்தவர்கள் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, துறைமுக அபிவிருத்தி ஆலோசனை சேவைகள் தனியார் நிறுவனத்தின் அதிகாரிகள் அவர்களுக்கு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வரை வணிகம் செய்ய அனுமதி வழங்கப்பட்டதாகத் தெரிவித்தனர்.