எதிர்காலத் தவறுகளைத் தவிர்க்க உதவும் மிக முக்கியமான கருவி Black Box!
Black Box என்பது ஒரு விமானத்தின் செயல்பாடுகளை பதிவு செய்யும் ஒரு சாதனம்.

விமானங்கள் இன்று உலகின் மிகப் பாதுகாப்பான பயண முறைகளில் ஒன்றாக இருந்தாலும் உலகின் எந்த இடத்திலாவது சில வேளைகளில் விபத்துகள் ஏற்படும் போதெல்லாம் நடுநடுங்கி போகிறேன்.
விமான விபத்துக்கள், மிகப்பெரிய உயிரிழப்புகளையும், உண்மைகளை மீட்டெடுக்க முடியாத நிலைகளையும் ஏற்படுத்திவிடுகிறது. இத்தகைய சூழ்நிலைகளில் உண்மையை கண்டறிந்து, எதிர்காலத் தவறுகளைத் தவிர்க்க உதவும் மிக முக்கியமான கருவி தான் Black Box.
Black Box என்பது ஒரு விமானத்தின் செயல்பாடுகளை பதிவு செய்யும் ஒரு சாதனம். இது இரண்டு முக்கியமான பகுதிகளை கொண்டது. முதலாவது விமானத்தின் இயக்கத்தின் போது நிகழும் தொழில்நுட்ப தரவுகளை பதிவு செய்யும் கருவி. மற்றது விமானம் இயக்கப்படும் போது விமானிகள் தங்களுக்கிடையே பேசும் ஒலி, அலாரங்கள் மற்றும் சுற்றுப்புற சத்தங்களை பதிவு செய்யும் கருவி.Black Box" (கறுப்புப் பெட்டி) என அழைக்கப்பட்டாலும் இது உண்மையில் ஒரெஞ்சு நிறத்தில் தான் இருக்கிறது, விபத்து நேரத்தில் விரைவாக கண்டுபிடிக்க வசதியாக இருப்பதற்காக. அதே போல தான் சோவியத் யூனியன் விண்வெளி வீரர்கள் அணிந்து செல்லும் உடைகள் ஒரெஞ்சு நிறத்தில் தான் இருந்தது.
1953-ம் ஆண்டு,ஆஸ்திரேலியாவை சேர்ந்த David Warren என்ற ஒருவர் விமான விபத்துகளின் காரணங்களை ஆராய்வதற்காக ஒரு சாதனத்தை உருவாக்க வேண்டும் எனக் கருதி, "Flight Memory Unit" என்ற கருவியை வடிவமைத்தார். ஏனெனில் அவரது தந்தை ஒரு விமான விபத்தில் உயிரிழந்ததைத் தொடர்ந்து, எதிர்கால விபத்துக்களில் உண்மையை அறிய வேண்டிய அவசியத்தை உணர்ந்தார்.1960-களில் அவர் ஒரு சர்வதேச வல்லுநராய் உருவெடுத்து, பின்னர் விமானங்கள் அனைத்திலும் கட்டாயமாக பொருத்தப்பட வேண்டிய கருவியாக மாறியது.
Black Box இன் சிறப்பு என்னவென்றால் கொட்டும் மழை, தீவிர வெப்பம், பூமியுடன் நேரடியான மோதல், நீரில் மூழ்குதல் போன்ற அனைத்து சூழ்நிலைகளுக்கும் தாங்கக்கூடிய வகையில் Titanium அல்லது Stainless Steel கொண்டு உருவாக்கப்பட்டு இருக்கும். மிக சிறிய அளவிலான இந்த பெட்டியின் நிறை ஐந்து கிலோ இருக்கலாம். அதிக பட்சமாக ஏழு கிலோ. 1100°C வரை வெப்பத்தை தாங்க கூடியது. 6000 மீட்டர் ஆழத்தில் உள்ள தண்ணீருக்குள்ளும் சிதைவடையாமல் இருக்கும். மிக முக்கியமாக கடலில் மூழ்கி இருந்தாலும் முப்பது நாட்கள் வரை அது இருக்கும் இடத்தை பற்றிய சிக்னல் வெளியிடும். பல விமான விபத்துகளில் Black Box முக்கிய ஆதாரமாக இருந்துள்ளது. இருந்தாலும் 2014 இல் காணாமல் போன
Malaysia Airlines பற்றிய விபரங்கள் இதுவரையில் யாருக்கும் தெரியவில்லை. காரணம் Black Box கண்டு பிடிக்க பட வில்லை.
கடந்த பதிவில் குறிப்பிட்டபடி 2009 இல் Air France விமானம் அட்லாண்டிக் கடலில் விழுந்தது. இரண்டு ஆண்டுகள் கழித்து Black Box கண்டுபிடிக்கப்பட்டது. விமானம் தானாகவே தரையிறங்கும் முறையை விமானிகள் தவறாக புரிந்ததையால் விபத்து ஏற்பட்டது என்று கண்டறியப்பட்டது. அதே போல 2015 இல் பரவலாக பேசப்பட்ட
Germanwings விமானத்தின் விமானி நித்திரை காணாமல் இருந்ததாகவும், விமானத்தை மலைக்கு நேராக ஓட்டினார் என்பதும் தெரியவந்தது. இந்த விபத்துகளில் அனைவரும் பலியானார்கள் என்பதை சொல்ல தேவையில்லை.
எதிர்காலத்தில் Black box இல் மேம்பாடுகள் வருவதற்கான சாத்தியம் உண்டு .அதாவது Black Box தரவுகளை நேரடியாக satellite-மூலம் மையத்துக்கு அனுப்பி தரவுகளை கிளவுட் மூலமாக சேமிப்பாகவும் பாதுகாப்பாகவும் வைக்க முடியும். இப்போது நாம் ஊர் சுற்ற போகும் போது எடுத்துக் கொண்ட காணொளிகளை சேமிப்பது போல. Black Box என்பது வெறும் கருவி அல்ல. அது வானில் மறைந்த உண்மைகளை வெளிக்கொண்டு வரும் நேரடியான சாட்சியாக செயல்படுகிறது. பிளாக் பாக்ஸ் விமானப் பாதுகாப்பின் மூளைக்கு ஒப்பான ஒரு சாதனம். இது விமான விபத்துக்களின் காரணங்களைக் கண்டறிந்து, எதிர்காலத்தில் இதேபோன்ற தவறுகள் நிகழாமல் தடுக்க உதவுகிறது. தொழில்நுட்பம் முன்னேறும் போது, பிளாக் பாக்ஸின் திறன்களும் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் மூலம் விமானப் பயணம் மேலும் பாதுகாப்பானதாக மாற்றப்படுகிறது.
Black Box உண்மையை தான் பேசும் – ஆனாலும் அது பேசுவது விபத்துக்குப் பிறகு மட்டுமே.