மீனவர் வலையில் சிக்கிய ராட்சத வாலை மீன்கள்; மீன்களுடன் மீனவர் எடுத்த புகைப்படம் வைரல்!
பவானிசாகர் அணை நீர் தேக்க பகுதியில் மீனவர் வலையில் ராட்சத வாலை மீன்கள் சிக்கியுள்ளது.

பவானிசாகர் அணை நீர் தேக்க பகுதியில் மீன் பிடிக்க வலை விரித்த மீனவ இளைஞரின் வலையில், சுமார் 260 கிலோ எடை கொண்ட 14க்கும் மேற்பட்ட வாலை மீன்கள் சிக்கியுள்ளது. வலையில் ராட்சத மீன்கள் சிக்கியதால் மகிழ்ச்சியடைந்த இளைஞர், மீன்களுக்கு நடுவில் படுத்து எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள சிறுமுகை அடுத்துள்ள பவானிசாகர் அணை நீர் தேக்கப் பகுதியில் பெத்திகுட்டை, காந்தவயல், லிங்காபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் உள்ளது. மூன்று பக்கம் வனப்பகுதி, ஒரு பக்கம் அணையின் நீர் தேக்கம் என ரம்மியமாக காட்சி அளிக்கும் இந்த கிராமங்களில் வசிக்கும் மக்கள், விவசாயத்திற்கு அடுத்தபடியாக மீன் பிடி தொழிலை செய்து வருகின்றனர்.

இதுவரை இல்லாத அளவில் ஒரே நேரத்தில் 260 கிலோ எடையுள்ள வாலை மீன்கள் சிக்கியதால், மகிழ்ச்சி அடைந்த பூபதி, வலையில் சிக்கிய மீன்களை அடுக்கி வைத்து அவற்றின் நடுவே படுத்து புகைப்படம் எடுத்துக்கொண்டார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
இது குறித்து மீனவர் பூபதி கூறுகையில், “கடந்த பல வருடங்களாக பவானி அணையின் நீர் தேக்க பகுதியில் மீன் பிடித்து வருகிறேன். வழக்கமாக 4 கிலோ 5 கிலோ எடையுள்ள மீன்கள் மட்டுமே கிடைக்கும். தற்போது மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பெய்வதால், பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், அணையின் நீர்மட்டம் 100 அடிக்கு உயர்ந்துள்ளது.
இந்நிலையில், ஒரே நேரத்தில் 3 அடி 4 அடி உயரமுள்ள வாலை மீன்கள் வலையில் சிக்கியுள்ளது. இதுவரை இவ்வளவு பெரிய மீன்கள் என் வலையில் சிக்கியது இல்லை. முதல் முறையாக நான் வீசிய வலையில் பெரிய வாலை மீன்கள் சிக்கியது. இதனை சக மீனவர்களும், பொதுமக்களும் அதிசியமாக பார்த்து சென்றனர்” என்றார்.