" மாற்றம் " வரவேண்டும் என மனதார விரும்பினால் முதலில் தமிழ் அரசியற் கைதிகள் அனைவரையும் தாமதமின்றி விடுதலை செய்யுங்கள்.
அந்நியரால் ஆட்டுவிக்கப்படும் இலங்கையின்அ ரசியல்!

சிங்களச் சிறையில் மிக நீண்ட காலமாக வாடும் தமிழ் அரசியற் கைதிகளின் விடுதலை விவகாரம் தொடர்பில் அரசியல் அதிகாரத்தைத் தம்வசம் வைத்திருப்போர் , அரசியல்வாதிகள் & பொதுமக்கள் ஆகியோரின் மேலான கவனத்துக்கு!
முதலில் 1948 இலிருந்து இலங்கையின் இன வரலாற்றை மேலோட்டமாகப் பார்ப்போம்.
* மலையக மக்களின் குடியுரிமை பறிப்பு.
* கிழக்கில் சிங்களக் குடியேற்றம்.
* சிங்களம் மட்டும் ' சட்டவாக்கம்.
* தமிழர் மீது கொலைவெறித் தாக்குதல்.
* கண்டி யாத்திரை.
* பண். தேரர் கொலை & சிலை.
* 1972 பௌத்த சிங்கள அரசியலமைப்பு.
* பல்கலைக்கழகத் தரப்படுத்தல்.
இவ்வளவும் நடந்த பின்னரே தமிழ் இளைஞர் & மாணவர் அரசியல் களத்தில் இறங்கினர். தமது உரிமை கோரி அறவழியில் போராடினர்.
* 1974 தமிழாராய்ச்சி மாநாடு படுகொலை.
இச்சம்பவமே அறவழிப் போராட்டத்தை மறவழிப் போராட்டமாக மாற்றியது. அதாவது அரசுக்கும் தமிழ் இளைஞர் களுக்குமிடையே முறுகல் நிலை முற்றியது.
* 1975 காங்கேசன்துறை இடைத்தேர்தல்.
* 1976 வட்டுக்கோட்டைத் தீர்மானம்.
* 1977 பொதுத்தேர்தல் முடிவு.
* 1977 தமிழர் மீது கொலைத் தாக்குதல்.
இக்காலத்தில் அரசுக்கும் தமிழ் இளைஞர்களுக்குமிடையே ஆயுத மோதல் ஆரம்பித்தது.
* 1978 பயங்கரவாதத் தடுப்புச் சட்டம்.
* 1983 தமிழர் மீது கொலைத் தாக்குதல்.
* 1983 / 84 இந்தியத் தலையீடு.
இந்தியா தமிழ் இளைஞர் இயக்கங்கள் வந்து போகத் தன் எல்லையைத் திறந்தது. அத்துடன் போர்ப் பயிற்சியும் ஆயுதமும் வழங்கியது. அதுவரை அரசுக்கும் தமிழ் இளைஞர்களுக்குமிடையே நிலவிய ஆயுத மோதல் இந்தியத் தலையீடு காரணமாக இலங்கையின் உள்நாட்டுப்போராக மாறியது.
இதன் விளைவாக பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் தமிழர் மீது தாறுமாறாகப் பாய்ந்தது. போர் முடிந்து 16 ஆண்டுகள் கடந்தும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் தமிழர் மீது பாய இன்றும் தயார் நிலையிலேயே உள்ளது.
நடந்து முடிந்த போரின் மிச்சமாக அரசியற் கைதிகளின் விவகாரம் உள்ளது. எச்சமாக காணாமலாக்கப்பட்டோர் விவகாரம் உள்ளது. சொச்சமாக முள்ளிவாய்க்கால் விவகாரம் உள்ளது. இம்மூன்றும் போரை நினைவூட்டிக்கொண்டே இருக்கும். இதனை அரசியல் அதிகாரத்தைத் தம்வசம் வைத்திருப்போர் கவனிக்க வேண்டும்.
மிக நீண்ட காலமாகச் சிங்களச் சிறையில் வாடும் தமிழ் அரசியற் கைதிகளை அவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை அடிப்படையாக வைத்து விடுவிக்கத் தயங்குவது ஏற்கக்கூடிய ஒன்றல்ல. இனங்களிடையே நல்லிணக்கம் பற்றிப் பேசுவோர் தமது நல்லெண்ணத்தை முதலில் வெளிப்படுத்த வேண்டும்.
வரலாற்றை ஆராய்ந்தால் இலங்கை அரசே தண்டனைக்குரிய குற்றவாளி.
பாதிக்கப்பட்டவர்களாகவே தமிழ் மக்கள் உள்ளனர். தவறிளைத்த அரசு மென்மேலும் தமிழ் மக்களைத் தண்டிக்கும் எண்ணத்தை மாற்றி தன் தவறைத் திருத்துவதில் அக்கறை கொள்ள வேண்டும். மாறாக , பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் கைகட்டி , கண்மூடி , வாய்பொத்தி வாழ வேண்டும் என போதிக்க முற்பட வேண்டாம்.
அச்சமின்றி உள்ளதை உரத்துப் பேச உரிய தருணம் இது. தவறு யார் பக்கம் இருப்பினும் அதனைச் சுயவிமர்சனம் செய்து கொள்வது சிறப்பு.
கல்வியிற் சிறந்தோர் அதிகம் வாழும் இலங்கைத் தீவின் திரும்பும் திசையெல்லாம் நான்கு மத வழிபடும் இடங்கள் காட்சியளிக்கின்றன. ஆனாலும் இங்கு வாழும் இனங்களிடையே குரோதம் &.விரோதம் அதிகரித்துச் செல்கிறது.
ஏன்?, இதன் இரகசியம் என்ன ? ஆராய யாருக்கும் விருப்பமோ நேரமோ இல்லை. இதுதான் இலங்கையின் அரசியல். அந்நியரால் ஆட்டுவிக்கப்படும் அரசியல்.
புதிய ஆட்சியாளர் இதைப் புரிந்து கொண்டு " மாற்றம் " வரவேண்டும் என மனதார விரும்பினால் முதலில் தமிழ் அரசியற் கைதிகள் அனைவரையும் தாமதமின்றி விடுதலை செய்யுங்கள்.
இதனை அரசியல்வாதிகளும் பொதுமக்களும் அனைவரும் ஒரே குரலில் அரசிடம் வலியுறுத்த வேண்டும்.
முகநூல்பகிர்வு.
தேவதாசன் கனகசபை.