விண்வெளி தொழில்நுட்பத்தில் ரஷ்யாவின் உதவியை வடகொரியா கோரக்கூடும்.-டாக்டர் நாம் சுங்
விண்வெளித் தொழில்நுட்பத்தில் முன்னணியில் இருக்கும் ரஷ்யா, வடகொரியாவின் செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்த உதவியாக இருக்கும்.
7.jpeg)
அணு ஆயுதங்கள் பற்றிய எந்த பேச்சுவார்த்தையும் வெளிப்படையாக நடக்க வாய்ப்பில்லை
மே மாதம் வடகொரியாவின் ராணுவ உளவு செயற்கைக்கோள் ஏவுதல் தோல்வியடைந்துவிட்டது. எனவே, இந்த சந்திப்பின் போது, விண்வெளி தொழில்நுட்பத்தில் ரஷ்யாவின் உதவியை வடகொரியா கோரக்கூடும் என்று டாக்டர் நாம் சுங் கணித்துள்ளார்.
விண்வெளித் தொழில்நுட்பத்தில் முன்னணியில் இருக்கும் ரஷ்யா, வடகொரியாவின் செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்த உதவியாக இருக்கும்.
வடகொரியா தனது உளவு செயற்கைக்கோள்களின் தொழில்நுட்பத்தை மேம்படுத்தவும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை உருவாக்கவும் ரஷ்யாவின் ஆதரவை நாடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அதே சமயம் அணு ஆயுதங்கள் பற்றிய எந்த பேச்சுவார்த்தையும் வெளிப்படையாக நடக்க வாய்ப்பில்லை என்று டாக்டர் நாம் சுங் நம்புகிறார்.
மேற்கத்திய ஆயுதங்கள் யுக்ரேனுக்குள் நுழைவது மற்றும் ரஷ்ய நிலப்பரப்பை அச்சுறுத்துவது குறித்து புதின் முன்னெச்சரிக்கை உணர்வு கொண்டவர். எனவே அணு ஆயுதங்களின் சாத்தியமான பயன்பாடு குறித்து ஆலோசனைகளை அவர் வழங்கி உள்ளார்.
எவ்வாறாயினும், கொரியாவிலும் வடகிழக்கு ஆசியாவிலும் அணுசக்தி தொடர்பான ஒத்துழைப்பு அல்லது அணு ஆயுதங்களைப் பகிர்வது என்பது ரஷ்யாவுக்கு அண்டை நாடுகள் மற்றும் அமெரிக்கா போன்றவற்றிலிருந்து குறிப்பிடத்தக்க விளைவுகளை ஏற்படுத்தும்” என்று டாக்டர் நாம் கூறுகிறார்.
எனவே, இந்த உச்சிமாநாட்டில் அணுஆயுதங்கள் பற்றிய பேச்சுவார்த்தைகள் வெளிவர வாய்ப்பில்லை என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.