பிரித்தானியாவை குறிவைக்கும் ஈரான் – ரஷ்யா; MI5 தலைவர் எச்சரிக்கை
.
“பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் நீடித்த குழப்பத்தை” ஏற்படுத்த ரஷ்யா விரும்புவதாக பிரித்தானியாவின் உளவு நிறுவனமான MI5 எச்சரித்துள்ளது.
ரஷ்யாவிற்கு எதிரான போரில் உக்ரைனுக்கு ஆதரவு வழங்கியதற்காக ரஷ்ய உளவுத்துறை நிறுவனம் பிரித்தானியாவில் நாசகார பணிகளில் ஈடுபட்டுள்ளதாக MI5இன் தலைவர் கென் மெக்கலம் தெரிவித்துள்ளார்.
“குறிப்பாக ரஷ்ய உளவுத்துறை நிறுவனமான GRU பிரித்தானிய மற்றும் ஐரோப்பிய நாடுகளில் குழப்பத்தை உருவாக்கும் ஒரு நீடித்த பணியில் ஈடுபட்டுள்ளதாக” என்று மெக்கலம் சுட்டிக்காட்டியுள்ளார்.
தனது வருடாந்திர உரையின் போது MI5இன் தலைவர் இந்த தகவல்களை வெளிப்படுத்தியிருந்தார்.
இதன்படி பிரித்தானியாவிற்கு எதிரான சதித்திட்டங்களில் முதன்மையான நாடுகளாக ரஷ்யாவும், ஈரானும் உருவெடுத்துள்ளன என்றும் மெக்கலம் குறிப்பிட்டார்.
இஸ்லாமிய அரசு (ஐஎஸ்) மற்றும் ஈரான் ஆதரவு போராளிக் குழுக்கள் பிரித்தானிய மண்ணில் தாக்குதல் நடத்தலாம் என்று அவர் எச்சரித்தார்.
“இன்றைய இஸ்லாமிய அரசு ஒரு தசாப்தத்திற்கு முன்பு இருந்த சக்தி அல்ல” என்று மெக்கலம் கூறினார். “ஆனால், அவர்கள் மீண்டும் பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்வதற்கான முயற்சிகளை மீண்டும் தொடங்கியுள்ளனர்.
2022 ஜனவரி முதல் ஈரானின் ஆதரவுடன் முன்னெடுப்படவிருந்த குறைந்தது 20 நாசவேலைகளை MI5 தடுத்து நிறுத்தியதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
இதேவேளை, ஐரோப்பாவிலிருந்து 750க்கும் மேற்பட்ட ரஷ்ய உளவாளிகள் என அட