Breaking News
இலங்கையில் முதன்முறையாக தேர்தலில் போட்டியிடும் திருநங்கை
.

இலங்கை சோசலிச கட்சியின் மகளிர் விவகார செயலாளர் சானு நிமேஷா, இலங்கை தேர்தலில் போட்டியிடவுள்ள முதல் திருநங்கை என்ற வரலாற்றை படைத்துள்ளார்.
இவர், நடைபெறவுள்ள பொதுதேர்தலில், கேகாலை மாவட்டத்தில் போட்டியிடவுள்ளார்.
“பொதுத் தேர்தலில் போட்டியிட எனக்கு வாய்ப்பளித்த இலங்கை சோசலிசக் கட்சிக்கு நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். முதன்முறையாக தேர்தலில் போட்டியிட திருநங்கை ஒருவரை நிறுத்தியதன் மூலம் சரித்திரம் படைத்தேன்” என, நிமேஷா ஊடகங்களுக்கு தெரிவித்தார்.