மக்களிடம் மன்னிப்புக் கேட்பது தான் ஒரே வழி! எந்தக் கதையும் அரசியல் அர்த்தமற்றது.
.
34.jpeg)
சபாநாயகர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தால் எல்லாம் முடிந்து விடாது! தவறு செய்தால் யாரையும் மன்னிக்கமாட்டோம் என்று ஐனாதிபதி சொல்வதாலும் இந்த விடயம் முடிந்து விடப் போவதில்லை!இந்த விடயம் பல்வேறு விடயங்களில் முக்கியத்துவமானது!
01. NPP அதிகாரத்திற்கு வர முன்வைத்து பிரச்சாரம் செய்த , மக்கள் பணியாளர்களின் நேர்மையை முழுவதுமாக இந்த விடயம் கேள்விக்குள்ளாக்கி விட்டுள்ளது. “முதல் கோணமே முற்றும் கோணல் “ என்ற தோற்றப்பாட்டை உண்டாக்கி விட்டது. ( மேலும் ஒரு அமைச்சர் , பிரதிஅமைச்சர் இவ் விடயத்தில் கேள்விக்குட்படுத்தப்பட்டுள்ளனர். எதிர்க்கட்சி பா.உக்களும் இதில் உள்ளனர்).
02. மற்ற கட்சிகளின் பா.உக்கள் இப்படியான பொய்த் தகவலை வழங்கினால் , அது இப்படியான ராஜினாமாக்களுடன் முடிந்து விடலாம் ! ஆனால் NPP பா.உக்களே இப்படியான மோசடி செய்வது , எந்த வகையிலும் ஏற்க முடியாததது.
03. NPP, JVP அரசாங்கம் இன்று எதிர்க்கட்சியில் இருந்திருந்தால், இந்த / இப்படியான விடயங்களில் எந்தளவு விமர்சித்து இருப்பார்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே! அதே அளவு இன்றைய எதிர்க்கட்சிகள் இந்த விடயத்தை விமர்சிப்பதில் எந்த தவறையும் காண முடியாது! ஆனால் ஜனாதிபதி அநுரா மற்ற அரசாங்கத் தலைவர் போல ” தவறு செய்தால் யாரையும் மன்னிக்கமாட்டோம்” என்று மார்தட்டி விட்டு தவறிழைத்தவரை பதவியில் இருந்து அகற்றுவது மட்டும் போதுமானதுமல்ல, தீர்வுமல்ல.
இன்னொரு படி மேலே சென்று , புதிய அரசாங்கத்தின் சார்பில் மக்களிடம் மன்னிப்புக் கோருவதே , மற்ற அரசியல் கலாசாரத்தில் இருந்து தாங்கள் வேறுபட்டவர்கள், உண்மையாளர்கள், மக்கள் சேவகர்கள் என்பதை நிருபிக்க இருக்கும் ஒரே வழியாகும்! ” எல்லாப் பாதையும் ரோமாபுரிக்கா? ” அல்லது இல்லையா?