Breaking News
சுமந்திரனுக்கு வழங்கப்பட்ட இரண்டு மெய்ப்பாதுகாவலர்கள் வெடித்தது சர்ச்சை!
,

இலங்கை தமிழரசு கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான ஆ.சுமந்திரனுக்கு இரண்டு மெய்ப்பாதுகாவலர்களின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளமையானது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அநுர அரசு ஆட்சியமைத்த பின்னர் செலவினங்களை குறைக்க வேண்டும் என்ற அடிப்படையில் முன்னாள் ஜனாதிபதிகள், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகரன் உட்பட பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் மெய்ப்பாதுகாவலர்களின் பாதுகாப்பினை பெற்றுக் கொள்ளவில்லை.
இருப்பினும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராக காணப்படுகின்ற எம்.ஏ.சுமந்திரனுக்கு இரண்டு மெய்ப்பாதுகாவலர்களின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.