இன்றும் வடக்கு கிழக்கில் 10 பொதுமக்களுக்கு 1 இராணுவம்! வன்னியில் 1:5 எனும் விகிதத்தில் இராணுவம் நிலைநிறுத்தப்பட்டு இருக்கின்றது.
இராணுவம் ஆக்கிரமித்துள்ள 30,000 ஏக்கருக்கும் அதிகமான வளமான வடக்கு கிழக்கு நிலங்களை விடுவித்து விவசாய பொருளாதாரத்தை ஊக்குவிக்க முடியும்.

இலங்கை அரசாங்கம் தனது மீளெழும் செலவினங்களில் (Recurrent Expenditure) 15 % ஐ அரசாங்க ஊழியர்களுக்கான சம்பளத்திற்காக செலவு செய்கின்றது
அதாவது ஏறத்தாழ மாதாந்தம் ரூபா 93 பில்லியன் ரூபா அரசாங்க ஊழியர் சம்பளத்திற்காக செலவழிக்கப்படுகின்றது
இவ் மாத சம்பள செலவீனத்தில் ஏறத்தாழ 48 %- 50 % இராணுவ கட்டமைப்பின் சம்பளத்திற்காக செலவு செய்யப்படுகின்றது
இவ்வாறு இலங்கை மீளெழும் செலவீனந்தை முழுமையாக ஏப்பமிடும் இராணுவத்தின் ஏழு பிராந்திய தலைமையகங்களில் ஐந்து வடக்கு கிழக்கில் நிறுத்தியிருக்கின்றார்கள்
அதாவது 10 பொதுமக்களுக்கு 1 இராணுவம் என்ற விகிதத்தில் வடக்கு கிழக்கில் நிலை நிறுத்தி இருக்கின்றார்கள்
குறிப்பாக வன்னியில் 1:5 எனும் விகிதத்தில் இராணுவம் நிலைநிறுத்தப்பட்டு இருக்கின்றது.
இந்த இராணுவம் வடக்கு கிழக்கு பொருளாதாரத்தின் ஆதாரமான சகல விவசாய பண்ணைகளையும் முழுமையாக ஆக்கிரமித்து வருமானம் ஈட்டி வருகின்றது,
குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள விவசாய பண்ணைகள் ஊடக மட்டும் ஆண்டு தோறும் 15 மில்லியன் வருமானத்தை இராணுவத்தினர் உழைத்து வருகின்றார்கள்.
அதே போன்று கிளிநொச்சி மாவட்ட பண்ணைகள் ஊடக 13 மில்லியன் ரூபா வருமானத்தை இராணுவத்தினர் சம்பாதித்து வருகின்றார்கள்.
இந்த இராணுவ பண்ணைகளை விவசாய கூட்டுறவு அமைப்புக்களிடம் வழங்கி விருத்தி செய்தால் வடக்கு கிழக்கு இலங்கை தீவின் விவசாய பொருளாதாரத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்திற்கு கணிசமாக பங்களிக்க முடியும்.
குறிப்பாக இந்த பண்ணைகளில் சேமிப்பு தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தி வடிகால் வெள்ளத்தடுப்பு அணைகளை மேம்படுத்தி உற்பத்தித்திறன் மேம்பாடு, பௌதிக வள மேம்பாடு, நிலத்தடி நீர் முகாமைத்துவம்,போன்ற அடிப்படை மாற்றங்களை செய்து வடக்கு கிழக்கு விவசாய சமூகத்தை வலுவடைய செய்ய முடியும்.
உள்ளூர் விதை உற்பத்தி , சேவைகால பயிற்சிகள் , விவசாய தொழில்நுட்ப விரிவாக்கம் போன்ற பல்வேறு விடயஙக்ளுக்கு இந்த பண்ணைகளை வினைத்திறனாக பயன்படுத்த முடியும்.
அதே போன்று சரியான உள்ளூடுகள் , இயற்கை உரம் போன்ற அடிப்படை விடயங்களை விவசாயிகளுக்கு உரிய நேரங்களில் இந்த பண்ணைகளை மக்கள் மயப்படுத்துவதன் ஊடக பெற்று கொடுக்க முடியும்
அதே போல இராணுவம் ஆக்கிரமித்துள்ள 30,000 ஏக்கருக்கும் அதிகமான வளமான வடக்கு கிழக்கு நிலங்களை விடுவித்து விவசாய பொருளாதாரத்தை தேசிய உற்பத்தி நோக்கி ஊக்குவிக்க முடியும்
இதனூடாக இராணுவ செலவீனங்களை கணிசமாக குறைத்து தேசிய அரச செலவீனங்களை வினைதிறனாக மேம்படுத்த முடியும்.
ஆனால் அதிகாரத்திக்கு வந்து ஒரு வருடத்தை நெருங்கும் ஜேவிபி ஆட்சியாளர்களுக்கு வடக்கு கிழக்கு பொருளாதார விவகாரங்களில் எந்த அக்கறையும் இல்லை.
வடக்கு கிழக்கு இராணுவமயமாக்கலை அகற்றுவது குறித்து எந்த சிந்தனையும் இல்லை
இப்போது புதிதாக முன்னாள் ஜனாதிபதிகள் உட்பட்ட பாராளமனற உறுப்பினர்களின் வரப்பிரசாதங்களை நீக்க போவதாக நாடகம் ஆடுகின்றார்கள்.
ஆனால் மறுமுனையில் வடக்கு கிழக்கில் ஆக்கிரமிப்பில் ஈடுபடும் பௌத்த பிக்குகளுக்கு அமைச்சரவை பாதுகாப்பு உட்பட்ட வரப்பிரசாதங்களை வழங்கி வருகின்றார்கள்.
குறிப்பாக கடந்த வாரம் திருகோணமலையில் குற்ற செயல்களில் ஈடுபட்டு வரும் பனாமுரே திலகவன்ச தேரருக்கு அமைச்சரவை பாதுகாப்பை உறுதி செய்திருக்கின்றார்கள்
இந்த வித்தைகளால் இலங்கை நிதி கட்டமைப்பில் எந்த Material மாற்றமும் ஏற்பட போவதில்லை
ஜேவிபி தொடர்ச்சியாக கவனத்தை ஈர்க்கும் Material இல்லாத விடயங்களையே பேசி வருகின்றது
இதனால் எந்த பயனும் ஏற்பட போவதில்லை.
உண்மையில் ஜேவிபி க்கு நிதியளிக்கும் பிரபல திருடர்கள் டிரான் அல்லஸ், ஷம்மி சில்வா உட்பட்ட திருடர்களை பாதுகாத்து கொண்டு ஊழல் ஒழிப்பை பேசுகின்றார்கள்
மஹிந்த ராஜபக்சேவை உத்தியோகபூர்வ வதிவிடத்திலிருந்து வெளியேற்ற போவதாக ஒரு வருடமாக பேசி வருகின்றார்கள்
ராஜபக்சே குடும்பத்தை சிறைக்கு அனுப்ப போவதாக பல மாதங்களாக பேசுகின்றார்கள்
ஆனால் நியத்தில் பெரும்பாலான விடயங்கள் வெற்று பேச்சுகளாக கடந்து போகின்றது.
இந்த நாடகங்களை தவிர்த்து வடக்கு கிழக்கை உள்ளடக்கி உற்பத்தி பொருளாதாரத்தில் அக்கறை செலுத்த தவறினால் அண்மையில் ஏற்பட்டு வரும் Global Supply Chain மாற்றங்களின் விளைவாக 2028 க்கு முன்னேற சர்வதேச Bondholders முன் சரணடைய வேண்டி வரும்.
ஊர்குருவி