ஒரு பயணியின் ஆதங்கம், நேற்று இரவு நடந்த சம்பவம்!
பேருந்தில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு நடத்துனரே முழுப்பொறுப்பு.

ஒரு பயணியின் ஆதங்கம்இ நேற்று இரவு நடந்த சம்பவம்!
இதைச் சொல்லியே ஆகனும் என்பதற்காகச் சொல்கிறேன். வவுனியாவில் இருந்து கிளிநொச்சி வருவதற்காக கொழும்பு to யாழ்ப்பாணம் பேருந்தில் ஏறி அமர்ந்தேன்,
நடத்துனர் பற்றுத்துண்டுகளை போட்டவண்ணம் பின் இருக்கைகள் இருக்கும் இடத்தை நோக்கி நகர்ந்து சென்றார் .
பேருந்து ஓமந்தையை அன்மித்தபோது முன்பக்கமாக நின்றிருந்த ஒருவர் பேசிக்கொண்டு வந்து, உனக்கு எத்தினவயசு, ஏன் அந்தப்பெண்ணோடு உரசிக்கொண்டு நிற்கிறாய், இங்காலவந்து ஆம்பிளைகளோடு உரசன், எனச் சொல்லியபடி அந்த வயது முதிர்ந்த ஐயாவை இழுத்துவிட்டார்.
அதன் பிறகு தூசனவார்த்தைகளால் அவரைப் பேசியபடி நாலைந்து தடவைகள் அந்த வயது முதிர்ந்த ஐயாவைத் தாக்கினார், அப்பவும் அந்த முதியவர் நான் நித்திரையில் இருந்தேன், தவறுதலாக முட்டியிருக்கலாம் எனக்கூறியும் அந்த இளஞன் கேட்கவில்லை.
நான் அடிக்கவேண்டாம் எனச் சொல்லி எழுந்து தடுத்தேன், அதன் பிறகு நடத்துனர் வந்து அந்த இளஞனை அழைத்துச் சென்றார் .
நான் நினைக்கிறேன் அவர் நடத்துனரது நண்பராக இருக்கவேண்டும் அல்லது வேற பேருந்து நடத்துனராக இருக்கவேண்டும்.
பின்னர் எனது இருக்கையை அந்த முதியவரிடம் எழுந்து கொடுத்துவிட்டு நடத்துனரிடம் சொன்னேன் பேருந்தை பொலிஸ்ரேசனுக்கு விடும்படி, அவர் உடனடியாக பேருந்தை நிறுத்தி அந்த இளஞரை இறக்கிவிட்டார்.
அதன் பிறகு அந்தப் பெண்ணிடம் கேட்டேன் உங்களிடம் அவர் என்ன செய்தார் என. அந்தப் பெண் ஒரு முஸ்லீம் பெண் தனக்கு எதுவும் செய்யவில்லை ஆனால் தன்னில் முட்டுவது போல் ஆடிக்கொண்டிருந்தார்.
ஆதலால் நான் சற்று தள்ளி அமர்ந்தேன் என... சரி அப்படியென்றால் நீங்கள் அவரிடம் முறையீடு செய்யவில்லையா என்றேன். நான் எதுவும் சொல்லவில்லைத் தம்பி என்றார் .
அப்போதுதான் பேருந்தில் இருந்தவர்கள் குழம்பினார்கள் ஆனால் ஐயாவுக்கு பலமான அடி விழுந்தது, அவர் அழுதுகொண்டிருந்தார். நடத்துனர் கண்டும் காணாததுபோல சென்றார்.
பேருந்தில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு நடத்துனரே முழுப்பொறுப்பும் .
ஒரு பெண்ணைத் தகாத முறையில் தீண்டினால் அல்லது வேறேதும் வகையில் நடந்துகொண்டால் அந்தப்பெண் நடத்துனருக்கு அறிவிக்க வேண்டும்.
அப்படி அறிவிக்கும் பட்ஷத்தில் நடத்துனரும் சாரதியும் ஒருமித்து பொலிஸ்ரேசனுக்கு அருகில் பேருந்தை நிறுத்தி அந்தப் பெண்ணால் கூறப்பட்ட முறைப்பாட்டை தெரிவித்து முறைப்பாடு செய்தபின் பேருந்தை எடுத்துச்செல்ல முடியும்.
குற்றவாளியை கூட்டில் அடைத்து மறுநாள் நீதிமன்றுக்கு முன்னிலைப்படுத்துவார்கள் இதையே சட்டம் சொல்கிறது அது வேறு பிரச்சனைகள் என்றாலும் இந்தமுறையிங்தான் செல்லமுடியும் .
யாரும் யாருக்கும் கைநீட்டி அடிக்கவோ வேறேதும் செய்யவோ முடியாது .
நேற்று நடத்துனர் நடந்துகொண்ட விதம் மிகவும் முறையற்றதாகும். இப்படியான நடத்துனர்களை நம்பி எப்படி பேருந்துகளில் ஏறிப் பயணம் செய்யமுடியும்..?
இவ்வாறான நடத்துனர்களை முறைப்படி தண்டிக்கவேண்டும் அல்லது தொடர்ந்தும் இவ்வாறான தாக்குதல்கள் நடந்துகொண்டே இருக்கும்...
பேருந்து இல..wp NC 1050.