பொத்துவில் மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி
,

பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் ஒவ்வொரு வாரமும் செவ்வாய் மற்றும் புதன் கிழமைகளில் சிறுபிள்ளை வைத்திய நிபுணரின் சேவைகளைப் பெற முடியும் என வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவின் தலைவரும், அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் கல்முனைக் கிளைச் செயலாளருமான வைத்தியர் உவைஸ் பாறுக் தெரிவித்தார்.
வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் நிதின் ரனவக்கவுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட தொடர் முயற்சிகளின் பயனாக, அம்பாறை மாவட்ட பொது வைத்தியசாலையின் சிறுபிள்ளை வைத்திய நிபுணர் வைத்தியர் தனுஷியா சிவலிங்கம் வாரத்தில் இரு தினங்கள் பொத்துவில் வைத்தியசாலைக்கு வருகை தந்து சேவையாற்ற முன்வந்துள்ளார்.
கடந்த 2025.07.15 முதல் சிறுபிள்ளைகளுக்கான விசேட வைத்தியச் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டு, இதுவரை மிகச் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.
இதன்படி, வாரத்தில் இரு தினங்கள் இச்சேவைகளைப் பெற முடியும். எதிர்காலத்தில் மற்ற விசேட வைத்திய நிபுணர்களின் சேவைகளையும் இப்பிரதேச மக்களுக்கு வழங்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இவ்வாறு, எமது கோரிக்கைகளை ஏற்று பொத்துவில் பிரதேச மக்களுக்காக சேவையாற்ற முன்வந்த சிறுபிள்ளை வைத்திய நிபுணர் வைத்தியர் தனுஷியா சிவலிங்கம், இதற்கு உதவியாகவும் ஒத்துழைப்பு வழங்கிய அம்பாறை மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சந்திரசேன மற்றும் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் நிதின் ரனவக்க ஆகியோருக்கு, பொத்துவில் பிரதேச மக்கள் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்வதாக வைத்தியர் உவைஸ் பாறுக் கூறினார்.