மனநலம் பாதிக்கப்பட்ட நபரை கடுமையாக மூன்று வர்த்தகர்கள் தாக்கியுள்ளனர்.
துரைராஜ் சண்முகநாதனுக்கு நீதி கோரி சாமிமலை நகரில் உள்ள பேருந்து தரிப்பிடத்தில் அமைதி ஆர்ப்பாட்டம்

கடந்த 30.07.2025 அன்று சாமிமலை நகரில் துரைராஜ் சண்முகநாதன் என்ற கவரவலை பகுதியை சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட நபரை கடுமையாக மூன்று வர்த்தகர்கள் தாக்கியுள்ளனர்.
இதன் பின்னர் இவரை மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலையில் அனுமதிக்க பட்டு மேலதிக சிகிச்சைக்காக கிளங்கன் ஆதார வைத்திய சாலைக்கு கொண்டு செல்ல பட்டு அங்கு இருந்து கண்டி போதனா வைத்திய சாலைக்கு மாற்ற பட்டார்.
கண்டி போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று மீண்டும் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு மாற்றம் செய்து தற்போது சிகிச்சை பெற்று வருகின்றார்.
சிகிச்சை பெற்று வரும் 47 வயது உடைய துரைராஜ் சண்முகநாதனுக்கு நீதி கோரி சாமிமலை நகரில் உள்ள பேருந்து தரிப்பிடத்தில் இன்று மதியம் அமைதி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நிகழ்வில் 200 க்கு மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டனர்.ஆர்ப்பாட்ட காரர்கள் பதாகை ஏந்தி சரீர பிணையில் மூவர் விடுதலை செய்ய பட்டதிற்க்கு எதிராக இந்த அமைதி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.