பலதும் பத்தும். 05,08,2025 - முப்படை வீரர்களை கைது செய்ய பாதுகாப்பு அமைச்சு உத்தரவிட்டிருந்தது.
யாழ்ப்பாணம், கடைக்காடு, அலியாவேலி களப்பு அருகே இலங்கை கடற்படை நடத்திய சிறப்பு தேடுதல்

யாழ்ப்பாணம், கடைக்காடு, அலியாவேலி களப்பு அருகே இலங்கை கடற்படை நடத்திய சிறப்பு தேடுதல்
யாழ்ப்பாணம், கடைக்காடு, அலியாவேலி களப்பு அருகே இலங்கை கடற்படை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சுமார் நூற்று இரண்டு (102) கிலோகிராம் மற்றும் முந்நூற்று ஐம்பது (350) கிராம் (ஈரமான எடை) கேரள கஞ்சா, இருபத்தி மூன்று (23) மில்லியன் ரூபாயை விட அதிகமான தெரு மதிப்புள்ள ஒரு தொகையை கடற்படையனர் 2025 ஆகஸ்ட் 04 அன்று கைப்பற்றினர்.
அதன்படி, யாழ்ப்பாணம், கடைக்காடு, அலியாவேலி கழப்புக்கு அருகிலுள்ள பகுதியில் வடக்கு கடற்படை கட்டளையின் வெத்தலக்கேணி கடற்படை நிலையம் நடத்திய இந்த சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, அப்பகுதியில் உள்ள ஒரு புதரில் வைக்கப்பட்டிருந்த இரண்டு (02) சந்தேகத்திற்கிடமான பொதிகள் அவதானிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டன. அப்போது,பொதிகளில் அடைக்கப்பட்டிருந்த நூற்று இரண்டு (102) கிலோகிராம் முந்நூற்று ஐம்பது (350) கிராம் (ஈரமான எடை) கேரள கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.
மேலும், கடற்படையால் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவின் மொத்த தெரு மதிப்பு இருபத்தி மூன்று (23) மில்லியன் ரூபாய்க்கு மேல் இருக்கும் என்று நம்பப்படுகிறது, மேலும் கேரள கஞ்சா தொகையானது மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மருதங்கேணி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
பாடசாலை மாணவர்களை அரச பேருந்துகளில் ஏற்றுவது இல்லை என கினிகத்தேன பகுதியில் உள்ள பாடசாலை மாணவர்கள் புகார்.
முன் கூட்டியே பணம் செலுத்தி ஹட்டன் அரச பேருந்து நிலையத்தில் பெறப்பட்ட பருவகால சீட்டினை வைத்து இருக்கும் கினிகத்தேன பகுதியில் உள்ள பிரபல சிங்கள கினிகத்தேன சென்றல் கொலேஜ் , விக்னேவரா தமிழ் வித்தியாலயம் அப் பகுதியில் உள்ள ஏனைய பாடசாலை மாணவ மாணவிகளுக்கு இவ்வாறு இடம் பெற்று உள்ளது.
இது குறித்து பாடசாலை மாணவர்கள் கருத்து தெரிவிக்கையில் காலை வேளையில் அரசு பேருந்துகளில் ஏற்றாமல் செல்வதால் பாடசாலை நேரத்திற்கு செல்ல வேண்டி உள்ளதால் தனியார் பேருந்துகளில் அதிகளவு பணம் கொடுத்து செல்ல வேண்டி உள்ளது எனவும், மாலை வேளையில் பாடசாலை நிறைவு பெற்று 2 மணிக்கு மேல் அவ் வீதியூடாக வரும் அரச பேருந்துகளில் ஏற்றாமல் செல்வதால் நடை பயணமாக இல்லங்களுக்கு செல்ல வேண்டி உள்ளது எனவும் இதனால் முன்கூட்டியே பணம் கொடுத்து பெற்று கொள்ள பட்ட பருவகால சீட்டில் பயன் இல்லை எனவும் கூறுகின்றனர்.
இது குறித்து சம்பந்தப்பட்ட ஹட்டன் அரச பேருந்து நிலைய அதிகாரிகள் மற்றும் போக்குவரத்து அமைச்சர் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை முன் வைக்கின்றனர்.
பொது மன்னிப்பு காலத்தில் சரணடையாத முப்படை வீரர்களை கைது செய்ய பாதுகாப்பு அமைச்சு உத்தரவிட்டிருந்தது.
2024 ஏப்ரல் 20 ஆம் திகதி முதல் மே 20 ஆம் திகதி வரை அறிவிக்கப்பட்ட பொது மன்னிப்பு காலத்தில் சரணடையாத முப்படை வீரர்களை கைது செய்ய பாதுகாப்பு அமைச்சு உத்தரவிட்டிருந்தது.
அதன்படி 2025 பெப்ரவரி 22 முதல் விசேட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
2025 பெப்ரவரி 22 முதல் ஒகஸ்ட் 3 ஆம் திகதி வரையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் சட்டவிரோதமாக சேவையை விட்டு வெளியேறிய 3504 முப்படை வீரர்களை கைது செய்துள்ளதாக இலங்கை பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட 3504 பேரில், 2937 இராணுவ வீரர்கள், 289 கடற்படை வீரர்கள், 278 விமானப் படை வீரர்கள் உள்ளடங்குவர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதோடு இவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என்று பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.