01 ஆம் திகதி ஆவணி 2007 அதிகாலை பொழுதில் வீட்டில் பெற்றோருக்கு முன்னால் படுகொலை செய்யப்பட்ட சகாதேவன் நிலக்சன்!
சகாதேவன் நிலக்சன் அவர்களின் தந்தையார் தனது மகன் கொலை தொடர்பாக இவ்வாறு வாக்குமூலம்!

விடிகாலை 5.30 மணியளவில் கொக்குவிலில் உள்ள எமது வீட் டின் முன்புறக் கதவை கடந்து பாய்ந்து மூவர் உள்ளே வந்தனர்.
அவர்கள் வீட்டின் கதவைத் திறக்கும்படி கோரினர்.நாம் மறுத்தோம்.
வந்தவர்கள் கதவை உடைத்துத் திறந்து உள்ளே புகுந்தனர்.
எமது இரு மகன்மாரினதும் பெயர்களைக் கேட்டனர். நாம் பெயர்களைக் கூறினோம்.
இளைய மகனான நிலக்ஷனுடன் தாங்கள் பேச வேண்டியுள்ளது எனத் தெரிவித்து அவரை வெளியே அழைத்துச் சென்றனர்.
எங்களை வீட்டுக்கு வெளியே வரக்கூடாது என்றும் அவர்கள் பணித்தனர்.
வீட்டு "போர்ட்டிக்கோ'வில் வைத்து அவர்கள் உரையாடும் சத்தம் கேட்டது.
சிறிது நேரத்தில் சூட்டுச் சத்தங்கள் கேட்டன. அவர்கள் முன் "கேற்'றைப் பாய்ந்து ஓடி னார்கள்.
மகன் சுடுபட்டு விழுந்து கிடந்தார்.
வந்தவர்களில் ஒருவர் நீளக் காற்சட்டை யும் சேட்டும் அணிந்திருந்தார்.
மற்றைய இருவரும் அரைக் காற்சட்டையும் சேட்டும் அணிந்திருந்தனர்
யாழ்ப்பாண குடாநாட்டில் இராணுவ ஊரடங்கு அமுலிலிருந்த 01 ஆம் திகதி ஆவணி 2007 அதிகாலை பொழுதில் வீட்டில் பெற்றோருக்கு முன்னால் படுகொலை செய்யப்பட்ட சகாதேவன் நிலக்சன் அவர்களின் தந்தையார் தனது மகன் கொலை தொடர்பாக இவ்வாறு வாக்குமூலம் வழங்கியிருந்தார்
யாழ்.பல்கலை கழக ஊடக வளங்கள் பயிற்சி மையத்தில் ஊடக கற்கை மாணவர் ஒருவர் இராணுவத்தினரால் ஊரடங்கு வேளையில் படுகொ*லை செய்யப்பட்டு 18 ஆண்டுகள் கடந்தும் எந்த நீதியும் இல்லை
குறிப்பிட்ட காலத்தில் யாழ்ப்பாண இராணுவ தளபதியாக கடமையாற்றிய மேஜர் ஜெனரல் சந்திரசிறி சகாதேவன் நிலக்சன் உட்பட 2005-2009 வரை யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற அத்துணை அட்டூழியங்களுக்கும் பொறுப்பு கூற வேண்டிய கிரிமினல் ஆவர்.
ஆனால் கடந்த கால ஆட்சியாளர்கள் மேஜர் ஜெனரல் சந்திரசிறியை வடக்கு மாகாண ஆளுநராக , இலங்கை வங்கி பணிப்பாளர் சபை உறுப்பினராக ,Airport and aviation services (sri lanka) PVT LTD தலைவராக நியமித்து அழகு பார்த்தார்கள்
இப்போது ஜேவிபி கோமாளிகள் புது அவதாரம் எடுத்து இராணுவத்தினரின் systemic crimes யிலிருந்து பாதுகாகாக்க இராணுவத்தின் கருவியாக இருந்த பிள்ளையான் தலையில் எல்லாவற்றையும் சுமத்தி நாடகமாடுகின்றார்கள்
இது போதாதென்று வடக்கில் இராணுவத்தின் கருவியாகவிருந்த டக்ளஸ் தேவானந்தா முதல் அருண் சித்தார்த் வரை திட்டமிட்டு பாதுகாக்கின்றார்கள்.