கற்பிட்டி தலவில் அன்னம்மாள் வருடாந்த திருவிழாவிற்கு பூரண ஒத்துழைப்பு வழங்கிய கடற்படை!
வரலாற்று பாரம்பரியமாக, கற்பிட்டி, தலவில், புனித அன்னம்மாள் தேவாலயத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழா

கற்பிட்டி தலவில் அன்னம்மாள் வருடாந்த திருவிழாவிற்கு பூரண ஒத்துழைப்பு வழங்கிய கடற்படை
கற்பிட்டி, தலவில், புனித அன்னம்மாள் தேவாலயத்தின் வருடாந்த திருவிழா ஞாயிற்றுக்கிழமை (03 ) கற்பிட்டி, தலவில், புனித அன்னம்மாள் தேவாலயத்தில் சிலாபம் ஆயர் வணக்கத்துக்குரிய டான் விமல் ஸ்ரீ ஜயசூரிய அவர்களின் தலைமையில் ஏராளமான பக்தர்களின் பங்கேற்புடன் நடைபெற்றதுடன், அதனை வெற்றிகரமாக நடத்துவதற்கு கடற்படை தனது பங்களிப்பை வழங்கியது.
ஒரு வரலாற்று பாரம்பரியமாக, கற்பிட்டி, தலவில், புனித அன்னம்மாள் தேவாலயத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழாவிற்கு தேவையான பாதுகாப்பு மற்றும் உயிர் காக்கும் சேவைகளை கடற்படை தொடர்ந்து வழங்கி வருகிறது.
அதன்படி, புனித அன்னம்மாள் சிலை ஊர்வலம் இம்முறையும் கடற்படையின் பங்களிப்புடன் மிக பிரமாண்டமாக நடைபெற்றதுடன், வருடாந்திர விழாவின் இறுதி மாலை ஆராதனையில் கடற்படை கிறிஸ்தவ சங்கத்தின் தலைவராகவும் கடற்படையின் பிரதிப் பிரதானியாகவும் பணியாற்றும் ரியர் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ மற்றும் வடமேற்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் வருணா பெர்டினாண்ட்ஸ் உள்ளிட்ட கடற்படை அதிகாரிகள் மற்றும் மாலுமிகளும் கலந்து கொண்டனர்.
கற்பிட்டி, தலவிலில் உள்ள புனித அன்னம்மாள் தேவாலயத்தில் வருடாந்திர திருவிழாவை வெற்றிகரமாக நடத்துவதற்கு கடற்படை அளித்த பங்களிப்பிற்காக தேவாலயத்தின் பாதிரியார் உட்பட திருச்சபை உறுப்பினர்கள் கடற்படைத் தளபதி உள்ளிட்ட முழு கடற்படையினருக்கும் தங்கள் நன்றியைத் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது